பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

366

தமிழர் வரலாறு

தமிழ்ச்சங்கத்தின், முன்னணி உறுப்பினர்களாகக் கூறப்பட்டனர்.

6. சங்கம் என்ற பெயர், எட்டாவது நூற்றாண்டில் அல்லது அதற்குப் பின்னர், மூன்று தமிழ்ச் சங்கங்கள் எனக் கூறப்பட்ட, பண்டைக் காலத்து அரச நாளோலக்கங்களுக்குச் சூட்டப்பட்டது:

7. சோழ, சேர அரசர்களும், பண்டைக் காலத்திலிருந்தே, இது போலும் அரச நாளோலக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், இவ்விரு இனங்களும், ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து, ஒன்பதாம் நூற்றாண்டுவரை,இருட்டடிப்புக்கு உள்ளாகிவிட்டமையாலும் அல்லது, மதுரையில் உள்ளதுபோலும் புகழ்பெற்ற கோயில்கள் இன்மையாலோ, அல்லது கண்டறியப்படமாட்டா வேறு காரணங்களாலோ, அவ்விடங்களில் உள்ள சிவன்கள், ஆங்குள்ள சங்கங்களுக்குத் துணை புரிந்ததாகப் பாராட்டப்படவில்லை. ஆகவேதான் சங்கங்களைக் கொண்டிருந்த பெருமையைப் பாண்டியர் மட்டுமே பெற்று விட்டனர்.

8. முச்சங்கங்கள் பற்றிய அக்கதை, ஒரு தலைமுறைப் புலவர்களிடமிருந்து அடுத்துவந்த தலைமுறையினர்க்குக் கூறப்பட்ட, உண்மையான மரபுவழிச் செய்தி அன்று : மாறாகப், பாக்களில் காணலம், சில குறிப்புகளிலிருந்தும், சிவன் திருவிளையாடல் கூறும் புராணக்கதைகளிலிருந்தும், ஊகித்துக்கொண்ட அரசவை உள்ளாரின், தெளிவற்ற நினைவுகளின் தாறுமாறான கருத்துக் குழப்பம் அது.

———————