பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்டுக் கணிப்பு முறை, பண்டைத் தமிழர் காணாத ஒன்று எழுத்தில் உண்மை இருக்கலாம். ஆனால், தமிழர்கள் எண்ணுமுறையினையே அறியாதவர்கள் என்பது, தமிழகத்துப் பண்டைய வரலாற்று நிலையை உணரத் துணை நிற்கும் எண்ணற்ற நூல்களில் ஒரு சிலைத்தானும் அறியாதார் கூற்றே ஆகும்.

எண்களை, எண்ணத்தெரிந்தவர்கள் பொருள் ஈட்டும் முயற்சி மேற்கொண்டு, கணவன் வெளிநாடு சென்றுவிட்டானாக, கைவிரலால் கோடு போட்டுப் போட்டு, அவர் சென்று ஒருநாள் ஆயிற்று; இரண்டுநாள் ஆயிற்று எனக் கணக்கிட்டு வந்தமையால், காரிகை ஒருத்தியின் தேய்ந்து போன விரலைக் காட்டுவதன் மூலம் (அவர் சென்ற நாள் ஒற்றித் தேய்ந்த விரல்” (குறள்:1261) பழங்காலப் பெண்டிர்க்கும் எண்ணுமுறை தெரியும் என்பதையும், போர்க்களம் புகுந்து பகைவர் வாளும் வேலும் வழங்கும் விழுப்புண் பெற வாய்ப்பில்லாமல், மனையகத்தே விணே உண்டுகழித்த நாட்களைத் தன் வாழ் நாளில் விணே கழிந்த நாளில் வைத்து எண்ணும் வீரன் ஒருவனைக் காட்டுவதன் மூலம், (“விழுப்புண் படாத நாள் எல்லாம், வழுக்கினுள் வைக்கும் தன் நாளை எடுத்து” குறள் : 776) அக்காலப் போர் விரனுக்கும் எண்ணுமுறை புரிந்திருந்தது என்பதைத் தெளிவாக்கியுள்ளார் வள்ளுவர்.

“வேலின் நட்ட களிறு பெயர்த் எண்ணின்” (புறம் : 302) “எல்லாம் எண்ணின் இடுகழங்கு தபுந”, “எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இவனே”, “எண்ணுவரம்பு அறியாப் பன்மா” (பதிற்றுப்பத்து : 32, 77. 84) என்பன போலும், தொடர்கள், பழந்தமிழர் எண்ணத் தெரிந்தவர் என்பதற்கான அகச்சான்றுகளாம்.

எழுத்தைப் போலவே எண்ணையும் கண்ணாக உதித்தவர் வள்ளுவர் காலத்துக்கு முந்திய தமிழர். “எண் என்ப ஏனை எழுத்து என்ப; இவ்விரண்டும் ,

ண் என்ப

த. வ.-24 .