பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374


ஆக, பழந்தமிழ்ப் பெருமக்கள், செவ்வெண்களை,ஒன்று முதல், கோடிவரை எண்ணத் தெரிந்தவர், ஒரைமுதல், ஊழிவரையாக, வாழ்நாளைப், பகுத்துக் கணக்கிடவும் தெரிந்தவர் என்பதற்கு இத் துணை அகச்சான்றுகள் கிடக்கவும், அவற்றுள் ஒன்றையேனும் கருத்தில் கொள்ளாது, பழந்தமிழர், ஆண்டுக் கணிப்பு முறையினையோ, ஆண்டு களைப் பேரெண் அளவில் எண்ணிக் காணும் அறிவினையோ பெற்றவர் அல்லர் என்ற தவறான முடிவிற்குச் சென்று, அத்தவறான முடிவையே காரணம் காட்டித், தமிழ்ச் சங்க அமைப்பில் ஐயம் கொள்ளும், திரு. பி. டி. எஸ். அவர்களின் போக்கு பொருளில் போக்காதல் அறிக. .

'முதல் சங்க காலத்தில் 549 அரசர்கள், 4440 ஆண்டுகளே ஆட்சி புரிந்திருக்க, அவர்களின் வழிவந்தவர்கள், இடைச்சங்ககாலத்தில், 59 அரசர்கள் 3700 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர் எனக் கூறுவது எள்ளி நகை யாடற்கு உரிய ஒன்று. முதல் இரு சங்கங்களின் ஆயுட்காலமாம் 8140 ஆண்டுகாலம் வாழ்ந்தவராக அகத்தியர் ஆக்கப்பட்டுள்ளார். 1850 ஆண்டுக்கால அளவில் 49 அரசர்கள் இறந்து போயிருக்க, அத்துணைப் பெருங்காலம் கடைச்சங்கப் பு ல வ ர் நாற்பத் தொன்பதின்மர் வாழ்ந்திருந்தனர் என்பதை நம்புவது இயலாது. ஆக, களவியல் உரையில் இடம் பெற்றிருக்கும் எண்களில் ஒன்று கூட நம்புதற்கு உரியதாக இல்லை. (பக்கம் : 232) -

முச்சங்கம் என்பன இருந்தன என்பது நம்ப இயலாத ஒன்று என்ற தம் கருத்துக்குத், திருவாளர் பி. டி. எஸ் அவர்கள் காட்டும் காரணங்களுள் இரண்டாவது காரணம் இது.

களவியல் உரையாசிரியர், தலைச்சங்கம் நிறுவிய அரசர்கள், எண்பத்தி ஒன்பதின்மர் என்றுதான் கூறியுள்ளாரே அன்றி, இவர் கூறியிருப்பது போல், ஐந்நூற்றி நான்பத்தொன்பதின்மர் எனக் கூறவில்லை, அவர்களைச்