பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

375

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

சங்கம் இரீஇயினார், காய்சின வழுதி முதலாகக், கடுங்கோன் ஈறாக, எண்பத்தொன்பதின்மர் என்ப' என்றுதான் களவியல் உரை கூறுகிறது. "முச்சங்கப் பழங்கதை" என்ற குறுந் தலைப்பில், இறையனார் களவியல் உரையினை மொழி பெயர்த்துத் தந்திருக்கும் இடத்தில், (பக்கம் : 230) தலைச் சங்கத்தை நிறுவிய அரசர்கள், எண்பத்தொன்பதின்மர் என்றுதான், திருவாளர். பி. டி. எஸ். அ வ ர் க ளு ம் கூறியுள்ளார்கள். - தலைச் சங்கத்து 89 அரசர்கள், 4400 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர் எனக் கூறும்போது, ஒர் அரசனின் ஆட்சி ஆண்டு, 49 ஆண்டு 5 திங்கள் ஆகிறது. இடைச் சங்கத்து 59 அரசர்கள் 3700 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர் எனக் கூறும் போது, ஒர் அரசனின் ஆட்சிக் காலம், 62 ஆண்டு 9 திங்கள் ஆகிறது. கடைச்சங்கத்து 49 அரசர்கள், 1850 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர் எனக் கூறும்போது, ஒர் அரசனின் ஆட்சிக் காலம், 38 ஆண்டுகள் ஆகிறது. செங்குட்டுவன், கண்ணகி சிலைக்காகக் கல் கொண்ட போது, ஆட்சி ஆண்டு ஐம்பதைக் கடந்துவிட்டான் என்கிறான் மாடல மறையோன், (சிலம்பு : நடுகல் 129) அவன் அதற்கு மேலும் வாழ்ந்து, கண்ணகிக்குக் கோயில் கட்டிச், சிலை நிறுவி, விழா எடுத்துள்ளான். இந்த உண்மையோடு இணைத்துப் பார்க்கும்போது, இடைச்சங்க காலத்து அரசர்களின் சராசரி ஆட்சி ஆண்டு, 62 ஆண்டு 9 திங்கள் என்பது நம்ப இயலாத ஒன்றாகத் தோன்றவில்லை; இயல்பானதே" - இராமர் சந்தித்த அகத்தியர், முதல் அகத்தியர் காலத்துக்கு நான்கு நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்த இரண்டாம் அகத்தியராவர் (பக்கம் : 55) என, இரு வேறு காலங்களில் வாழ்ந்த இரண்டு அகத்தியர்களைத், திருவாளர். பி.டி.எஸ். அவர்களே அறிமுகம் செய்து வைத்துள்ளார். அது செய்த அவர், தலைச்சங்க காலத்து அகத்தியர் வேறு, இடைச்சங்க காலத்து அகத்தியர் வேறு எனக் கொள்வது விடுத்து, இருவரையும், ஒருவராகவே கொண்டு குழம்புவது.