பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

381

புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்'
-முல்லைக்கலி : 4

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டியர்களுள் ஒருவனாம் என்ற பாராட்டிற்கு உரியனாகிய, முடத் திருமாறனே, பாண்டியர் குலப் பகைக் குலங்களுள் ஒன்றாம், சேரர் குடிவந்த குட்டுவன் என்பானுக்கு உரிய மேற்கு மலையையும், அதன்கண் சுனையையும், அதில் மலர்ந்து மணக்கும் குவளையையும் பாராட்டியுள்ளான்.

குட்டுவன்
குடவரைச் சுனைய மாயிதழ்க் குவளை
வண்டுபடு வான்போது கமழும்".
-நற்றிணை 105:

இவ்வகையால், தம்மைப் பாடிய புலவர்கள் தம் பகைக்குல வேந்தர்களைப் பாராட்டுவதைப் பொறுத்துக் கொள்வதோடு நில்லாது, அப் பகைக்குல வேந்தர்களைத் தம் வாயால் தாமே பாடிப் பாராட்டியது மட்டுமன்று, அதற்கும் மேலாக, புலவர்கள், தம் அரசவைக்கே வந்து, தம்முன் நின்றே, தம்மைப் பழித்தும், தம் பகைவரைப் பாராட்டியும் பாடிய பாடல்களையும் பொறுமையோடு கேட்கும் பேருள்ளமும் வாய்க்கப் பெற்றிருந்தனர்,

கரிகால் பெருவளத்தான் கண்ட போர்க்களங்களில், வெண்ணிப் போர்க்களமே, அவன் வெற்றிக்கு அடிகோலிய சிறப்பு வாய்ந்தது. இருபெரு வேந்தரும், பதினொரு வேளிரும் ஒருங்கே அழிந்தனர் அப்போர்க்களத்தில், அதனால் பரணர் முதலாம் புலவர் பல்லோரின் பாராட்டுக்கு உரியதாய் அமைந்துவிட்டது அப்போர்.

அப்போரில், கரிகாலன் பகைவர் அனைவரும் வீழ்ந்து விட்டனர் என்றாலும், எல்லோரும் அவன் வாள்பட்டே வீழ்ந்துவிட்டனர் அல்லர் அவர்களுள் சேரலாதனுக்கு