பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

387


அவண் இறுத்த இரும்பேரொக்கல்"; பகைவர் நாடும் கண்டு வந்திசின்...நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇய யாணர் நன்னாடும் கண்டுமதி மருண்டனென்' (பதிற்று : 12, 15) எனக் குமட்டுர்க்கண்ணனாரும், ஆளினம் கலித்த அதர் பல கடந்து மானினம் கலித்த மலைபின் ஒழிய, மீனினம் கலித்த துறை பல நீந்தி உள்ளி வந்த என மருதன் இளநாகனாரும் (புறம் : 188) கூறுவதும் காண்க.

தாம் கடம்பல கடந்து சென்று மீளும் புலவர்கள், பிற புலவர்களுக்கும் இரவலர்களுக்கும், கடந்து செல்ல வேண்டிய வழித்தடங்களை விளங்க உரைப்பதும் உண்டு. செங்கண் மாத்து நன்னன் சேய் நன்னனைப்பாடிய இரணியமுட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங் கெளசிகனார், ஆற்றின் அளவும், அசையும் நற்புலமும், வீற்றுவளம் சுரக்கும் அவன் நாடுபடு வல்சியும் கேளினி (மலைபடுகடாம் : 67.94) என வழி காட்டுவது காண்க.

இவ்வாறு வேங்கடம் முதல், குமரி வரையான தமிழகத்தை அறிந்ததோடு, கங்கைக் கரை அரசியல் நிகழ்ச்சிகளையும், அறிந்தவர், புலவர் மட்டும் அல்லர். தமிழகத்துக் குடிமக்களில் சிலரும் அது செய்துள்ளனர் : அங்கெல்லாம். சென்றும் வந்துள்ளனர்.

குடமலை நாட்டு மறையோன் ஒருவன், வேங்கடம் சென்று, திருமாலின் நின்ற கோலத்தையும், திருவரங்கம் சென்று திருமாலின் கிடந்த கோலத்தையும் கண்டு, பாண்டி நாட்டு மண்ணிலும் அடியிட்டுள்ளான். (சிலம்பு : காடுகாண் : 15-55).

தலைச்செங்கானத்து மாடல மறையோன், மாதவ முனிவர் மலைவளம் கொண்டு, குமரியம்பெருந்துறையில் நீராடித் தென்னவன் தலைநகர் மதுரைக்குச் செல்லவும், (சிலம்பு : அடைக்கலம் : 13-16) பின்னர், ஆங்கிருந்து புகார் நகர் சென்று, ஆங்குள்ளார்க்கு மதுரையில் நடந்தன கூறினமையால், நிகழ்ந்த கேடுகளுக்குக் கழுவாய் தேட,