பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

392 தமிழர் வரலாறு

கடைச்சங்க காலத்துப் புலவர்கள் பாடிய பாக்களையே பெருமளவில் கொண்டு, முதல் சங்க, இடைச்சங்க காலத்தவர் பாடிய பாக்களில் ஓரிரண்டைக் கொண்டிருக்கும் எட்டுத் தொகை நூல்களைத், தலைச்சங்க காலத்துக்கும், இடைச் சங்க காலத்துக்கும் கொண்டு செல்வதுதான் நம்ப முடியாத ஒன்று; மாறாக, அவற்றைக், கடைச்சங்க காலத்து நூலாகக் கொள்வதில் நம்ப இயலாதது எதுவும் இல்லை.

ஆகவே, இக்காரணம் காட்டி, தமிழ்ச்சங்கங்களின் அமைப்பு குறித்து ஐயம் கொள்வது முறையாகாது.

சமஸ்கிருதச் சொற்கள், அகத்தியர் காலத்திலேயே, ஓரளவு தமிழில் இடம் பெறத் தொடங்கிவிட்டன. அகத்திய, தொல்காப்பியச் சூத்திரங்களிலும் ஒருசில சமஸ்கிருதச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. இதைத், திருவாளர். பி. டி. எஸ். அவர்களும் உணர்ந்துள்ளார் (பக்கம் : 213). சமஸ்கிருதச் சொற்கள், தமிழில் இடம்பெறத் தொடங்கிவிட்டமையினாலேயே, "வடசொல்கிளவி, வட எழுத்து ஓரீஇ, எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” எனத், தொல்காப்பியர் விதி வகுக்கவும் செய்துள்ளார், ஆகவே, முடத்திரு மாறன் பாடலில், ஒரு வட சொல் இடம் பெற்றிருப்பது, முச்சங்க அமைப்பு குறித்து ஐயப்படுவதற்கு ஆதாரமாகாது.

கடைச்சங்கம் நிறுவிய பாண்டிய அரசர்களில், மூவர் மட்டுமே புலவர்களாவர் எனக் கூறுகிறது, இறையனார் களவியல் உரை. ஆனால், தொகை நூல்களை ஆராய்ந்து நோக்கியபோது, பாண்டியர் வழிவந்தவர்களில், கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் பதினொருவர், புலவர்களாக விளங்கியது தெரிகிறது. 1) ஒல்லையூர்த் தந்த பூதப் பாண்டியன் (புறம் : 71 அகம் : 25, 2) கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி (புறம் : 102 நற்றிணை :121, 3) ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், (புறம் : 183 : 4) தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (புறம் : 72, 5) உக்கிரப் பெருவழுதி (அகம் : 26, நற்றிணை: 63)