பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

402

தமிழர் வரலாறு

(பாலைக்கலி : 34 : 17-18) நீண்மாடக் கூடலார், புலன் நாவில் பிறந்தசொல் புதிது உண்ணும்பொழுது'

ஆக, புலவர்கள் ஒன்றுகூடித் தமிழ் ஆராய்ந்த ஒரு பேரவை, மதுரையில் பண்டு இருந்தது என்பது இயமற உறுதி செய்யப்பட்ட ஒன்றாகிறது:

புலவர் பலர், தம்முள் ஒருவரைத் தேர்ந்து கொண்டு ஒர் அவையாக இருந்து, மதுரையில் தமிழ் ஆராய்ந்து வந்தது, இத்துணைத் தெளிவாக உறுதிப்பட்ட உண்மை நிகழ்ச்சியாக இருக்கவும், அதன் இயக்கம் குறித்துத், திருவாளர் பி.டி.எஸ். அவர்கள் ஐயங்கொண்டதற்கு, இறையனார் களவியலுக்கு இன்றுள்ள உரை, நக்கீரரால் எழுதப்பட்டதே எனத் தவறுதலாகக் கொண்டுவிட்டதே அடிப்படைக் காரணமாய் அமைந்துவிட்டது.

இறையனார் களவியலுக்கு, நக்கீரர் எழுதிய உரை ஒன்றும் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் உரை, அவர் உரை அன்று : பழந்தமிழ்ப் பாடல்கள் எண்ணற்றன அழிந்து போனமை போலவே அவர் உரையும் அழிந்து போயிருக்க வேண்டும் இப்போது கிடைத்திருக்கும் உரை, அவரினும் பிற்பட்ட காலத்தில், பிறிதோர் ஆசிரியரால் எழுதப்பட்ட உரையாகும்.

தொல்காப்பியம், பொருளதிகாரம் ம ர பி ய ல், "வினையின் நீங்கி, விளங்கிய அறிவின் முதல்வன் கண்டது முதல் நூலாகும். (94) என்ற சூத்திரத்திற்கான விளக்க உரையில், பேராசிரியர், அவர்கள் கடைச்சங்கத்தாருள். களவியல் பொருள் கண்ட கணக்காயனார் மகனார், நக்கீரர், இடைச்சங்கத்தார்க்கும்.கடைச்சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம் என்றார். பிற்காலத்தார்க்கு உரை எழுதினோரும் அது கூறி கரிபோக்கினார் எனக் கூறியுள்ளார். இதிலிருந்து, கடைச்சங்க காலத்தில், நக்கீரர் எழுதிய உரையின் வேறாகப், பிற்காலத்தே வேறு ஓர் உரையும் எழுதப்பட்டுளது என்பது தெளிவாகிறது; ஆக