பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

403


இப்போதுள்ள உரை, நக்கீரரால் எழுதப்பட்டது அன்று என்ற முடிவிற்கு, அவ்வுரையே சான்று பகர்கிறது. களவியல் ஏழாம் சூத்திரத்தின் விளக்க உரையில், அச் சூத்திரத்தில் இடம் பெற்றிருக்கும். ‘’இருவரும் உள்வழி அவன் வரவு‘’ என்ற தொடரில் வந்திருக்கும் ‘’வரவு‘’ என்ற சொல் பற்றிய ஆய்வு மேற்கொண்டு, சொல்லிலக்கண விதிப்படி, ‘’செலவு‘’என்ற சொல் அல்லவோ வந்திருக்க வேண்டும்? அதற்கு மாறாக, ‘’வரவு‘’ என்ற சொல் வந்திருக்கிறதே என்ற வினாவினை எழுப்பி, அதற்கான இலக்கண அமைதி கூறி விட்டு, அதற்குச் சான்றாக, நக்கீரர் பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்றில் (36) ‘’துாண்டில் வெட்டுவன் வாங்க வாராது" என வரும் தொடர் எடுத்தாளப்பட்டு, ‘’என்று சான்றோர் சொல்லியது‘’ எனக் கூறப்பட்டுள்ளது. அவ்வுரை நக்கீரர் எழுதிய உரையாயின், தம்முடைய பாட்டையே எடுத்தாண்டு, "என்று சான்றோர் சொல்லியது' எனத் தம்மைத், தம்மின் வேறுபட்ட ஒருவராகக் கூறியிருக்க மாட்டார். ஆகவே,அத்தொடர் விளக்கம் ஒன்றே, அது நக்கீரரால் எழுதப்பட்டது அன்று! மாறாக, அப் பாட்டைப் பாடிய நக்கீரரை, எடுத்துக் காட்டவல்ல சான்றோராக மதித்த பிற்காலத்தவர் ஒருவரால் எழுதப்பட்டது என்பதை உறுதி செய்கிறது.

இந்த விளக்கத்தைத், திருவாளர் அய்யங்கார் அவர்கள் அறியாதிருக்கவில்லை. செந்தமிழ் தொகுதி : 4 பகுதி: 7ல் 1906 ஆம் ஆண்டு இதழில், திருவாளர், மு. இராகவையங்கார் அவர்கள், ‘’இளம்பூரணர்‘’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், இது பற்றிய விளக்கம் அ வரித்திருக்கும் பகுதியைத், தம்முடைய நூலில், திருவாளர், பி. டி. எஸ். அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளார் (பக்கம் : 229), என்றாலும் இந்த விளக்கமும் அவருக்கு அமைதி தந்ததாகத் தெரிய