பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

404

தமிழர் வரலாறு

வில்லை. ‘’திருவாளர், இராகவையங்கார் கொடுத்திருக்குக் சான்றுகள் ஒரளவு ஏற்புடைய என்றாலும், அவை போதுமானவை அல்ல‘’ என்றே முடித்திருப்பது காண்க (229)

இன்று கிடைத் திருக்கும் அகப்பொருள் உரை, காலத்தால் மிகமிகப் பிற்பட்டது : கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கும் பிற்பட்டது என்பதற்கான அகச்சான்றுகளும், அவ்வகப் பொருள் உரையிலேயே உள்ளன.

அகப்பொருள் கூறும் துறைகளுக்கு விளக்கம் அளிக்கும் உதாரணப் பாக்கள், தொல்காப்பியம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாவினத்தைச் சேராத, அவர் காலத்துக்கு தனி இது பிற்பட்ட காலத்தில் இடம் பெற்றுவிட்ட பாவினமாக இருப்பது ஒன்றே, அவ்வுரை, தொல்காப்பியத்தை இலக்கணமாக ஏற்றுக்கொண்ட கடைச்சங்க காலத்துக்குப் பிற்பட்டது என்பதை உறுதி செய்யப் போதுமானது.

மேலும், மேற்கோள்களாகக் காட்டப்பட்ட, அப்பாக்களின் பாட்டுடைத் தலைவன், நெல்வேலி வென்ற நெடுமாறன் என்றும், சிவநேயச் செல்வன் என்றும் கூறுகின்றன அப்பாக்கள். ‘’நெறி கெழு செங்கோல் நடா, நெடுமாறன் : நெல்வேவி வென்றான்‘’ (109) , ‘’நெடுமாறன் வியன் முடி மேல் நின்றான் மணிகண்டம்போல் இருள் கூர்ந்து‘’ (262), என்ற பாக்களைக் காண்க. நெடுமாறன் என்ற பெயர் உடைமையும், அவன் நெல்லே லிப் போர் வென்றமையும், சிவனிடத்தே அன்புடைமையும் கொண்டு, அவனைக், கி. பி. ஏழாம் நூற்றாண்டினரான திருஞான சம்பந்தரால் சைவனாக ஆக்கப்பட்ட, நின்றசீர் நெடுமாறனாக, ஆராய்ச்சியாளர். உலகும் கருதுவர். இவ்வகையால், கி. பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்த்த ஒருவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பாடல்களைத் துறைவிளக்கத்திற்கான எடுத்துக் காட்டுக்களாகக் காட்டும் இப்போதைய அகப் பொருள் உரை, அந்த ஏழாம் நூற்றாண்டிற்கும் பிற்பட்ட காலத்திலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும்.