பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

405

திருவாளர். பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் இதை உணர்ந்துள்ளார்கள். ‘’இறையனார் அகப்பொருள் அளிக்கும் துறைகளில் விளக்கங்களுக்காக, மேற்கோள்களாகக் காட்டப்படும் பாக்களின் பாட்டுடைத் தலைவனாகிய அரிகேசரி பாரங்குசன் என்பான், கி. பி. 750இல் ஆட்சி புரிந் இருந்த, வேள்விக் குடிச்செப்பேட்டிற்கு உரியோனின் தந்தைக்குப் பாட்டன் ஆவன். ஆதலின், அந்த அரிகேசரி, கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு உரியவன் ஆகிறான். அவன் ஏழாம் நூற்றாண்டிற்கு உரியன் ஆகவே, அவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற பாக்களைத், தம் உரை விளக்க மேற்கோள்களாகக் காட்டும் இறையனார் அகப்பொருள் உரையாசிரியர், கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கும் பிற்பட்டவராதலே வேண்டும் (பக்கம் : 229-30) என அவர் உரைத்தல் காண்க.

இன்றுள்ள அகப்பொருள் உரை, கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கும் பிற்பட்ட காலத்திலேயே எழுதப்பட்டிருக்கும் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தும், பத்துப் பாட்டு, எட்டுத் தொகைப்பாடல்களில் இடம்பெறாத, ‘’சங்கம்‘’ என்ற சமஸ்கிருதச் சொல்லால், தமிழ்ச் சங்கங்கள் பெயர் சூட்டப்பட்டிருப்பது கொண்டு, அச்சங்கங்களின் உண்மை குறித்த, தம் ஐயப்பாட்டிலிருந்து, திருவாளர் பி. டி. எஸ், அவர்கள் விடுபட்டிலர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாட்டில், (புறம் : 72) அவன் கூறும் புலவர் பேரவைக்குச், ‘’சங்கம்‘’ என்ற சொல்லால் கூடப் பெயர் சூட்டப்படவில்லை‘’ (பக்கம் : 239) என அவர் கூறுவது காண்க.

‘’தமிழ்ச் சங்கம்‘’ என்ற தொடர், அகப்பொருள் உரையில் மட்டுமே அல்லாமல், ‘’ஞானசம்பந்தன் உரைசெய் சங்கம்மலி செந்தமிழ்கள் பத்து‘’ என, தேவாரப் பாடல்களிலும் இடம் பெற்றுளது:

‘’சங்கம்‘’ போலும் சமஸ்கிருதச் சொற்கள் தமிழில் இடம்பெறத் தொடங்கியது எப்போது, ஒரு குறிக்கோள்