பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அதிகாரம் XVII

மக்கள் வாழ்க்கை

கி. பி. முதல் ஐந்நூறு ஆண்டுகள் :

பழந்தமிழர் முறை இன்னமும் வலுவாக நடைபெற்றது: தங்களிடையே பிராமணர்கள் வாழத்தொடங்கிவிட்ட நிலையிலும், அகத்தியனாரும், தொல்காப்பியனாரும் ஆரிய நாகரீகத்தைத் தமிழ் நாட்டில் புகுத்த முயற்சி மேற்கொண்டு விட்ட நிலையிலும், மக்களில் பெரும்பகுதியினர், ஆரிய நாகரீகம், தங்களிடையே இடம் பெறாதது போலவே வாழலாயினர். பழங்காலத்தில், தங்கள் மூதாதையர் வாழ்ந்த அதே முறையில் வாழ்ந்தனர் ; காதல் கொண்டனர். அவர்களின் தொழில்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றில், முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றினர். அதாவது, அவை சிறிதும் மாறுபடவேயில்லை. கீழே கொடுத்திருக்கும் எடுத்துக் காட்டுக்கள், கிறித்துவ ஆண்டு பிறப்பதற்கு முந்திய, எளிய சிற்றுார் வாழ்க்கை அழிவுறாமல், அப்படியே உளது என்பதை உணர்ந்துகொள்ளப் படிப்பவர்க்குத் துணை நிற்கும். சில நூற்றாண்டுகள் கழித்துச், சமஸ்கிருதக் கற்பனைப் பாடல்கள், தமிழர் அறிவை அடிமை கொண்டு, அவர்களின், அழகிய, இயற்கையோடியைந்த இனிய பாடல்களை அழிக்கத் தலைப் பட்டபோது கைவிட்டுவிட்ட, தங்களைச் சூழ உள்ள எளிய இயற்கைக் காட்சிகளிலிருந்தே தம் அகத்துாண்டுதலைத், தாம் பெற்றிருந்த அந்நிலையைச், சமஸ்கிருத நாகரீகத்தோடு தொடர்பு கொண்டுவிட்ட அந்நிலையிலும், தமிழ்ப்பாடல்கள் பெற்று வந்தன என்பதையும் அவை உணர்த்தும்:

மலை நாட்டில் உணவு உற்பத்தி !

மக்களின் முக்கியத் தொழில், உணவு உற்பத்தி, அது பல இடங்களில் விளக்கப்பட்டுளது. ‘’வேங்கை மரங்கள்