பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

410

தமிழர் வரலாறு

புல்வேய் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து,
நறுநெய்க் கடலை இசைப்பச் சோறுஅட்டு‘’
- புறம் : 120 : 1.14

மலைநாட்டில், உழுது, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டிய, இன்றியமையாத ஒன்று அன்று. உழுவது வேண்டாதே, உணவுப் பொருள் கிடைக்கும் நிலை கீழ்வரும் வாக்களில் விளக்கப்பட்டுளது. "உழுவர் உழுது விளைவிக்சு வேண்டாமல், தாமே விளையும் உணவுப் பொருட்கள் நான்கு உள. முதலாவது, சின்னஞ்சிறு இலைகளைக் கொண்ட மூங்கில் நெல் இரண்டாவது, பலா, இனிய சுவையுடைக் கணி. களைக் காய்த்துத் தொங்க விடும்; மூன்றாவது, கொழு கொழு என வளர்ந்திருக்கும், வள்ளிக் கொடி, கிழங்குகளை மண்ணுள் விட்டிருக்கும் ; நான்காவது, அழகிய நிறம் வாய்ந்த, குரங்குகள் பாய, மலைகள், தன்னிடை கட்டப்பட்டிருக்கும் அடைகளிலிருந்து தேனைச் சொரியும்'.

‘’உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே ;
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே ;
இரண்டே, தீஞ்சுவைப் பலவின் பழம் ஊழ்க் கும்மே;
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே.
நான்கே, அணிநிற ஒரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடும் குன்றம் தேன் சொரி யும்மே”.

புறம் : 1.09 : 3 - 8

கிளைகள்தோறும், மலை முகடுகள் தோறும் தேனடைக்ள் கட்டப்பட்டுத் தொங்க, பலா முதலாம் மரங்களில் பழங்கள் குலைகுலையாகத் தொங்க, மலைகளிலிருந்து அருவிகள் மாலைபோல் உருண்டோடிவர, கொல்லைகள் தோறும் வரகு, சாமை, தினைபோலும் பதினாறுவகைக் கூலங்கள் பெருகிவிளைய, இம்மலைநாடு, எக்காலத்தும் பெருவளம் உடையது என அதன் கண் பல்லாண்டு வாழ்ந்து, அதைப் பிரிந்து போக நேர்ந்தபோது வியந்து பாராட்டும் பெருமையுடையது'.