பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை கி. பி. ... 411. ஆண்டுகள் "பிரசம் தூங்கப், பெரும்பழம் துணர வரைவெள் ளருவி, மாலையின் இழிதரக், கூலம் எல்லாம் புலம்புக, நாளும் மல்லற்று அம்ம இம்மலை கெழு வெற்புஎனப் பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் நாடு" -நற்றினை : 93 - 1 - 5. வேடன் வாழ்க்கை : மலைநாட்டுவழியில், இருளில் வருவதால் நேரும், இடையூறுகளுக்கு ஆளாகும் வகையில் இரவில் வாரற்க என்று, ஒரிளம்பெண் தன் காதலனுக்கு எடுத்துக் கூறும் அறிவுரையினை நினைவூட்டும் வகையில், வேடன் ஒருவன் வாழ்க்கையில் இடம் பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை, ஒரு புலவர்,விளக்கியுள்ளார். "சிலிர்த்து நிற்கும் மயிர்கள் அடங்கிய கழுத்தினை உடைய ஆண் பன்றி,உணவின்மையால் தோலாய்வற்றி இளைத்து விட்ட பெண் பன்றியுடன் சென்று,முற்ற வளர்ந்து தினைக் கதிர்களை அளவின்றித் தின்று அழித்துவிட்டது கண்ட கானவன்,மலைவழியில், செல்லுதற்கு அரிய புழை அருகே பதுங்கியிருந்து, அம்பு எய்து கொன்ற, வெள்ளிய கொம்புகளைக் கொண்ட அந்த ஆண் பன்றியை, அணி செய்து கொண்ட கரிய கூந்தலை உடைய அவன் மனைவி, அறுத்துத்,தன் சுற்றத்தார் வீடுகளுக்கெல்லாம் சென்று பகுத்துக் கொடுக்கும் உயர்ந்த மலை நாட்டுக்கு உரிய தலைவனே கடுஞ்சினம் கொண்ட களிற்றியானை,புலியின் வருகையை எதிர் நோக்கிக் காத்து நிற்கும் இரவில்,நீ இங்கு வருதலை,நீ அஞ்சுகின்றாயல்லை; ஆனால்,நான் பெரிதும் அஞ்சுகின்றேன்;ஆகவே,பாம்பு அடங்கியிருக்கும்,ஈரம் பட்ட புற்றைக் கரடிக் கூட்டம்,கார்மேகம் போலச் சூழ்ந்துகொண்டு,பறித்து எடுக்கும், மலையகத்துச் சிறுவழியில் இனி வாராதே" "பிணர்ச்சுவல் பன்றி, தோல்முலைப் பிணவொடு கணைக்கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,