பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை கி. பி. ... ஆண்டுகள் 415 எஃகுடை எழில்நலத்து ஒருத்தி யொடு, நெருநை வைகுபுனல் அயர்ந்தனை", அகம் : 116 : 1-10 கடற்கரை நிலப்பரப்பில் : கடற்கரை நிலப்பரப்பாம் நெய்தல் நிலத்தின் முக்கியத் தொழில், மீன் பிடித்தல்.அத்தொழில், பாடல்புனையும் தம் புலமைக்கு ஏலா இழிவுடைப் பொருளாம் என்று புலவர் கருதவில்லை. "கதிரிட்டு முறுக்கித் திருத்தமாகச் செய்யப் பட்ட வலிய கயிற்றால் பின்னப்பட்ட பெரிய பெரிய மீன்பிடி வலைகளை, இடிபோல் முழங்கும் அலைகள் ஒயாக் கடவில் இடும்பொருட்டு, அவ்வலைகள் நிறைய ஏற்றப்பட்ட தோணியைப், பாகர்களால் பிணித்துக்கொண்டு செல்லப்படும். அடக்குதற்கு அரிய களிற்றைப் போலப், பரதவர் செலுத்துவர்... மலர்கள் உதிர்ந்து கிடக்கும் புதுமணல் பரந்த கானற்சோலையில், புன்னை, தன் நுண்ணிய மகரந்தப் பொடிகளை, ஒயாது வீசிக் கொண்டேயிருக்கும், கீழ்க் காற்று வந்து மோதுந் தோறும், நாரைகளின் வெண்ணிற முதுகில் தூவித் துார்க்கும் தெளிந்த கடற்கரைக்கண் நிற்கும் கண்டல் மரங்களை வேலியாகக் கொண்ட ஊர்”. 'வடிக்கதிர் திரித்த வன்ஞாண் பெருவலை, இடிக்குரல் புணரிப் பெளவத்து இடுமார், நிறையப் பெய்த அம்பி, காழோர் சிறையரும் களிற்றின், பரதவர் ஒய்யும்: போதவிழ், புதுமணல் கானல் புன்னைநுண் தாது கொண்டல் அசைவளி தூக்குதொறும், குருகின் வெண்புறம் ஒசிய வார்க்கும், தெண்கடல் கண்டல் வேலிய ஊர்", -நற்றிணை : 74 : 1-4 : 6-10 பின்வரும் அழகிய செய்யுளில், ஒரு மீனவப் பெண், தன் உறவினர், விரைந்து வீடு திரும்பமாட்டார் என்பதைக் கூறித்,