பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422

தமிழர் வரலாறு

கோலை நிலத்தில் ஊன்றி, ஒரு காலை அதன்மேல் வைத்து, ஓய்வான நிலையில் நின்றவாறே இதழ்களைக் குவித்து அவன் எழுப்பும் வீளை ஒலியைக் கேட்கும் ஆடுகள், பிறர்க்குரிய புலம் சென்று மேய்ந்துவிடாமல், அவ்வொலிக்கு மயங்கி, அவனைச்சூழ அடங்கி நிற்கும் அம்முல்லை நிலத்தில், இரவு நெடும் பொழுது ஆயினும் விருந்தினர் வந்துவிட்டால் மகிழ்ந்து வரவேற்பவளும், கணவன் கூறிய சொற்பிழையாது இல் இருந்து நல்லறம் ஆற்றும் கற்புடையாளும், மெல்விய சாயலும் இளமை நலம் மாறா அழகுடையாளும் ஆகிய இல்லத்தரசி வாழ்கின்ற வீடு உளது".

"வான் இடுபு சொரிந்த வயங்குபெயல் கடைநாள் பாணி கொண்ட பல்கால் மெல் உறி, ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கிப் பறிப்புறத்து இட்ட பால்நொடை இடையன், நுண்பல் துவலை ஒரு திறம் நனைப்பத் தண்டுகால் வைத்த ஒடுங்குநிலை, மடிவிளி சிறுதலைத் தொழுதி ஏமார்த்துஅல்கும் புறவினதுவே, பொய்யா யாணர் அல்லில் ஆயினும், விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்வியல் குறுமகள் உறைவின் ஊரே."

          - நற்றிணை : 142

முல்லையில், மிகவும் இன்பம் தரும் பருவம் இளவேனில், "பருவவரவால் இலைகளெல்லாம் பழுத்து உதிர்ந்து போன பிடவமரத்துக் கிளைகளெல்லாம் அரும்பலர்ந்து நிறைந்து விட்டன : புதல்கள் தோறும் படர்ந்து கிடக்கும் முல்லைக் கொடிகள் பூத்துக்குலுங்கின : கொன்றை மரங்கள், பொன் போலும் மலர்களை ஈன்றன. காயாவின் சிறுசிறு கிளைகளில் நீலமணி போலும் பன்மலர்கள் நிறைந்துவிட்டன. இவற்றிற் கெல்லாம் காரணமான கார்காலம் தொடங்கிவிட்டது.