பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426

தமிழர் வரலாறு

பகைவரால் அழிவுற்றுப் போகா ஒரு பெருவீரனுக்கு உவமை கூறியுள்ளார் ஒரு புலவர்".

"இரும்புபயன் படுக்கும் கருங்கைக் கொல்லன் விசைத்து எறி கூடமொடு பொரூஉம் உலைக்கல் அன்ன வல்லா ளன்னே".

          -புறம் : 170 : 15 - 17 மருத நிலத்தில் குளத்தின் அடைகரையில் வளர்ந்திருக்கும், அரம் போலும் முட்களை உடைய பிரம்புக் கொடி போலும் கொடியை உடைய ஆம்பலின், நீர் குறைய நீர் மட்டத்துக்குமேல் உயர்ந்து சுருண்டிருக்கும் இலை, அசைந்து அசைந்து வரும் வாடைக்காற்று வீசுந்தொறும், விரிந்து அடங்கும் காட்சிக்குக், கொல்லன் உலைக்களத்தில் காற்று அடிக்க விசைத்து இழுத்துவிடும் துருத்தியை உவமை காட்டியுள்ளார் ஒரு புலவர்". 

"பழனப் பொய்கை அடைகரைப் பிரம் பின் அரவாய் அன்ன அம்முள் நெடுங்கொடி அருவி ஆம்பல் அகலடை துடக்கி, அசைவரல் வாடை துக்கலின், ஊதுலை விசைவாங்கு தோவின் வீங்குபு ஞெகிழும்”.

               -அகம் : 96 : 3-7

தீ ஓங்கி எரிந்து அடங்கிய நிலையில், நெய்யில் பக்குவப்பட்டு மிதக்கும் இறைச்சித் துண்டுகளுக்குப் பருத்தி நூற்கும் பெண். கொட்டை நீக்கி அடித்துக்குவித்து வைத்திருக்கும் பருத்திக் குவியல்களை உவமையாக்கியுள்ளார் ஒரு புலவர், "பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன நெருப்புச்சினம் தணிந்த் தினம்தயங்கு கொழும் குறை".

            ழ-புறம் :125:1-2 இரட்டை இரட்டையாகக் கவைத்த கதிர்களைக் குற்றிப் புடைத்து எடுத்த வரகரிச்சோற்றையும், கால்நடைச்.