பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் வாழ்க்கை கி. பி, ... ஆண்டுகள் 427 சாணங்களால் ஆன எரு குவிந்து கிடக்கும் தெருவில், காலத்தே விளைந்திருக்கும் வேளையின் வெண் பூக்களை, வெள்ளிய தயிரில் மிதக்க விட்டு ஆய்ச்சியர் ஆக்கிய புளிக் குழம்பையும் வயிறார உண்டு அவரைக் காய்களைக் கொய்யும். தொழிலாளியைப் படம்பிடித்துள்ளார் ஒரு புலவர்.

 "கவைக்கதிர் வரசின் அவைப்புறு ஆக்கல், 

தாதெரு மறுகில் போதொடு பொதுளிய வேளை வெண்பூ வெண் தயிர்க் கொளீஇ ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை அவரை கொய்யுநர் ஆர மாந்தும்".

             -புறம் : 215 : 1-5
     காண்பவர் கருத்தை ஈர்க்கும் தகுதியற்றதான இழி

தொழிலும், புலவர்களின் கவியார்வத்தைத் தணித்துவிட வில்லை. "ஊரில் விழாத் தொடங்கிவிட்டது. அப்போது பறை கொட்டுதல் போலும் பணி ஆற்ற வேண்டுவது அவன் கடமை : ஆகவே ஆங்கும் செல்ல வேண்டும். பிள்ளைப் பேற்றிற்கு உரிய காலம் மனைவிக்கு வந்து விட்டது. அப்போது உடனிருந்து அவளுக்கு உதவ வேண்டுவதும் இன்றியமையாதது: ஆகவே, வீட்டிற்கும் செல்ல வேண்டும், இதற்கிடையில் ஞாயிறும் மறையத் தொடங்கிவிட்டான். மழை பெய்யவும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் கட்டிலுக்குக் கயிறு பின்னும் தொழிற் கடமை மேற்கொண்டுவிட்ட அத்தொழிலாளி, அப்பணியை விரைந்து முடித்துவிட்டு மேற்கூறிய இருபணிகள் குறித்து விரையத் துடிக்கும் நிலையில், பின்னும் வார்கோத்த அவன் கை ஊசி விரையும் விரைவினைச் சொல்ல இயலாது. அவ்விரைவினைத், தன்னை வெல்வார் யாரேனும் உளரேல் வருக என வஞ்சினம் கூறி வந்திருக்கும் வேற்றுார் வீரனோடு போரிட்டு வெல்லத் துடிக்கும், ஆத்திமாலை அணிந்த, அவ்வூர் வீரனின் உள்ள விரைவிற்கு உவமை காட்டியுள்ளார் ஒரு புலவர்"