பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428

தமிழர் வரலாறு

சாறுதலைக் கொண்டெனப், பெண் ஈற்று உற்றெனப், பட்ட மாரி, ஞான்ற ஞாயிற்றுக் கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ! ஊர்கொள வந்த பொருநனொடு ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே"

                    - புறம் 82
   ஊரில் நிகழ இருக்கும் விழாக்களை ஊர் மக்களுக்கு அறிவிக்கும் அறிவிப்பாளர்களாகப் பழங்காலத்தில் குயவர்களும் பணிபுரிந்துள்ளனர். "அரும்பு கட்டிய கதிர் போல் தோன்றும், ஒளி வீகம் மலர்களைக் கொத்துக் கொத்தாக ஈனும் நொச்சி மாலை அணிந்து, ஆறுபோல் அகன்று நீண்ட தெருவில், ஊரில் உள்ளார் யாவரும் கேட்க, 'இவ்வூரில், இன்ன நாளில் இன்ன விழா நடைபெறும் ; விழாவிற் பங்கு கொள்ள வருக என அறிவித்துச் செல்லும் அறிவால் முதிர்ந்த குயவனே. ஆம்பல் நெருங்க வளருமளவு வளம்மிக்க வயல்களையும், பொய்கையையும் உடைய ஊருக்கு, விழா அறிவிக்கச் செல்லுவையாயின், அவ்வூர் மகளிரை, கூரிய பற்களும் அகன்ற அல்குலும் உடையீர்” என அவர் நலம் பாராட்டி அழைத்து, தெறித்து இசை எழுப்புவதற்கு ஏற்புடைய நரம்பு கட்டிய யாழில் பாடத்தகும் பாடல்களை இனிதாக இசைக்க வல்ல உங்களுர்ப் பாணன் செய்யும் துன்பங்களுக்குக் கணக்கில ; அவன் உரைப்பன எல்லாம் மெபய்யேபோல் தோன்றினும், அனைத்தும் பொய்யே , பொய்யை மூடி மறைத்து மெய்யேபோல் கூறுவதில் வல்லவன் அப்பாணன். ஆகவே, அவன் கூறுவதில் பெரிதும் விழிப்பாய் இருப்பீர்களாக' என இதையும் அறிவித்துவர இயலுமோ? அறிவித்துவர வேண்டுகிறேன் எனப், பெண் ஒருத்தி, குயவனைப் பார்த்துக் கூறியதாக ஒரு செய்யுள்:

"கண்ணி கட்டிய கதிர அன்ன -

ஒண்குரல் நொச்சித் தெரியல் சூடி,