பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் வாழ்க்கை கி. பி. ... ஆண்டுகள் 429

ஆறுகிடந் தன்ன அகல்நெடும் தெருவில், சாறுஎன நுவலும் முதுவாய் குயவ! இதுவும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ! ஆம்பல் அமன்ற தீம்பெரும் பழனத்துப் பொய்கை ஊர்க்குப் போவோ யாகிக், கைகவர் நரம்பின் பனுவல் பாணன் செய்த அல்லல் பல்குவ ; வைஎயிற்று ஐதுஅகல் அல்குல் மகளிர் ; இவன் பொய்பொதி கொடுஞ்சொல் ஓம்பு மின் எனவே:

              - நற்றிணை : 200 
  குயவன். ஒருவகையில் கோயில் பூசாரியாகவும் இருந்து பலி கொடுப்பதும் செய்வன். "பழமையும் வெற்றிச் சிறப்பும் வாய்ந்த மூதூரில், பரந்து அகன்ற ஊர் மன்றத்தில், விழாத் தொடங்குவதற்கு முன்னர், நீல மணி போலும் மலர்க் கொத்துக்களை உடைய நொச்சிமாலை அணிந்த, உருவாலும், உள் அறிவாலும் மூத்த குயவன், தான் இடும்பவியை உண்ணுமாறு, பலி உண்ணும் கடவுளையும், காக்கைகளையும் அழைப்பதைக் கூறுகிறது பிறிதொரு செய்யுள்,

"மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடிப், பலிகள் ஆர்கைப் பார்முது குயவன் இடுபலி நுவலும் அகன்தலை மன்றத்து விழவுத் தலைக் கொண்ட பழவிறல் மூதூர்".

          -நற்றிணை : 298 : 1-4
   குயவனின் மந்திரக் கைத்திறன் இன்னமும் அழித்துவிட வில்லை. குழந்தைகளை, 'அக்கி’ எனப்படும் தோல் நோய் பற்றிக்கொண்டதும் , அவற்றின் தாய்மார், குழந்தைகளைக் குயவளிடம் கொண்டுசெல்ல, அவன் ஒரு குச்சியை, ஒருவகைச் செம்மண் குழம்பில் நனைத்து, அக்கொப்புளங்கள் உள்ள பகுதியைச் சுற்றி, யாளி எனப்படும்