பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430

தமிழர் வரலாறு

ஒரு கற்பனைப் பேயின் உருவத்தை வரையச், சில நாட்களுக்கெல்லாம் அந்நோய் மறைந்து போய் விடும்.
     உடைகளை வெளுத்துக் கஞ்சியூட்டல், பாடற்பொருளாக அமைவதற்குத் தகுதியற்ற சிறு செயல்களாகப் புலவர்கள் நினைக்கவில்லை. "கூத்து முதலாம் களியாட்டங்கள் ஒருபால் நிகழ, ஒயாது விழாக் கொண்டாடிக்கொண்டிருக்கும் மூதூர்களில், ஆடைகளைப், பருத்தி ஆடை, பட்டாடை என இனம் பிரித்து அழுக்குப் போகத் துவைத்தளிக்கும் தொழிலைக் கையோய்வதில்லாமல் செய்வதால் வறுமை அறியாது வாழும் சலவைத் தொழில் மகள் ஒருத்தி, சின்னம் சிறு பூத் தொழில்கள் கொண்ட சிறந்த ஆடைக்கு, இரவில் சோற்றுக் கஞ்சி ஊட்டும் சிறப்பு ஒரு பாட்டில் கூறப்பட்டுளது".

"ஆடியல் விழவின் அழுங்கல் மூதுார் உடை ஓர் பான்மையில் பெருங்கை துாவா வறன்இல் புலத்தி எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கம்".

         -நற்றிணை : 90 : 1-4
   பாறையில் தினை உலர்த்திக் காத்திருக்கும் ஒரு பெண்ணைப் பாடியுள்ளார் ஒரு புலவர். முன்கை நிறைய வளையல்களையும், பிற உடல் உறுப்புகளில் அவற்றிற்கு உரிய அணிகளையும் அணிந்திருக்கும் உயர்குடி மகளிர், கரிய பெரிய மலை மீது அகன்ற பாறையில் செந்தினை பரப்பிக் காத்து நிற்கின்றனர்.

"நிறைவளை முன்கை, நேரிழை மகளிர் இருங்கல் வியல் அறைச் செந்தினை பரப்பி" .

     -குறுந்தொகை : 335 : 1-2,

காய்ச்சிய பாலில் மோர் இட்டுத் தயிர் ஆக்குவதும் ஓர் உவமையாகக் கூறப்பட்டுளது. "பெண்மைக்குரிய மடப்பம் உடையளாய ஆய்மகள், தன்கை விரல் முனையால் தொட்டுத் தெறித்த சிறிதளவே ஆன மோர், குடம் நிறைய இருந்த