பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் பண்டை நாகரீகத்தின் நிலஇயல் அடிப்படை

21

லாலும், ஆண்டு வாழ்மக்கள் படைக்கலம்-ஏந்துவதில் சிறந்து விளங்கினமையாலும் , மறவர்களும் கள்வர்களும், பிற்காலத்தில் படை வீரர் தொழிலையும், அண்டை நிலங்களில் வாழும் உடலுரம் இல்லாத, ஆனால் செல்வத்தில் சிறந்திருந்தவர்களைக் கொள்ளையடித்து உண்ணும் கொடுந்தொழிலையும் மேற்கொண்டுவிடவே மறம் என்ற சொல், கொடுமை எனும் பொருள் குறிப்பதாகவும், கள்வர் என்ற சொல், திருடர் எனும் பொருள் குறிப்பதாகவும் மாறி விட்டன. ஆனால் தொடக்கநிலையில் மனிதர், வீரச் செயல் புரிவதில் தமக்குள்ள ஆர்வம் காரணமாகவே பாலை நில வாழ்வை மேற்கொண்டனர். ஆடவர் பாலைவனத்தில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும்போது, மகளிரும், குழந்தைகளும், குடும்ப வாழ்வில் என்னென்ன வசதி வாய்ப்புகள் கிடைத்தனவோ அவற்றை அனுபவித்து மகிழக் கலந்து வாழ்ந்து வந்தனராகவே, இந்நிலத்து வாழ்க்கை , பழங்குடி மக்கள் வாழ்வில், குடும்பத்தலைமை, மகளிரிடத்தில் அமையும் தாய்வழி ஆட்சி முறையை வற்புறுத்துவதாய் அமைந்துவிட்டது.

ஆயர் :

குறிஞ்சியில் ஒரு பால் மக்கள் தொகை பெருகிவிட, மற்றொருபால் கிடைக்கக் கூடிய உணவுப்பொருள் வழங்கல், குறையத்தொடங்கியபோது, அம்மக்கள், அடுத்த நிலப் பகுதியாகிய காட்டுநிலமாம் முல்லைக்குக் குடிபெயர்ந்தனர்: அக்கால கட்டத்தில் எருமை, பசு, செம்மறியாடு, வெள்ளாடு ஆகிய விலங்கினங்களையும், குறவர் வாழ்வில் பண்டே பழக்கப்பட்டு, வேட்டை ஆடுவார்க்குப் பெரிதும் பயன்பட்ட நாயையும் வளர்த்துப் பயன்கொள்வதாய் , மனித நாகரீக முன்னேற்றத்தின் அடுத்த பெருநிலையை எட்டிப்பிடித்தனர். இது, மனிதவாழ்க்கை முன்னேற்றமாம், ஏணியில் இரண் டாம் படிக்கு, அதாவது மேய்ச்சல் நாகரீகத்திற்குக் கொண்டு சென்றது. முல்லையில், கால்நடைகள், விரைவாகப் பெருகின. பழங்குடி வாழ்விலிருந்து, குடும்ப வாழ்வுமுறை