பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

446

தமிழர் வரலாறு

அண்ணல் யானையொடு வேந்துகளத்து ஒழிய
அரும் சமம் ததை யத் தாக்கி, நன்றும்
ஒன்னாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணையம் படப்பை நாடு கிழ வோயே’’.
- புறம் 126

போர் முரசுக்கு, அல்லது, கூறுவதாயின், அப்போர் முரசின் உறையும் தெய்வத்தின் ஆவிக்குக், குருதிப்பலி கொடுப்பதே போராகக் கருதப்பட்டது. போர் முரசு, அதற்கென அமைக்கப்படும் தனி இருக்கையில் வைக்கப்படும்; ஒரு செய்யுள் இவ்வாறு கூறுகிறது. முரசுக்குக் குற்றமாம் எனக் கூறப்படும் குற்றம் எதுவும் இல்லாதவாறு வலித்துப் பிணித்த வாரை உடைய கரு மரத்தால் செய்யப்பட்டமையால், கருமை நிறம் காட்டும் பக்கம் அழகுபெற, மயிலின் தழைத்து நீண்ட தோகை, ஒள்ளிய புள்ளிகள் நிறைந்த நீலமணி போலும் நிறம் வாய்ந்த மாலை, ஆகியவற்றைப் பொன்போலும் தளிர்களையுடைய உழிஞையொடு அழகுற அணியப்பெற்ற, குருதிப்பலி கொள்ளும் வேட்கையுடையதான பகைவர் உளம் தடுங்க முழங்க வல்லதான போர் முரசம், நீராடி வருவதன் முன்னர் எண்ணெய் நுரையை முகந்து வைத்தாற்போல், மெல்லிய மலர்கள் குவித்து வைக்கப்பட்ட கட்டில் ஒழுங்குசெய்யப்படும்’’.

"மாசற விசித்த வார்புறு வள் பின்,
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி, ஒண்பொறி மணித்தார், .
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை, உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை .

.-புறம் : 50 1-7