பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

452

தமிழர் வரலாறு

எல்லாம் எழுந்தோடி நெருங்க அமர்தலால், வயல்மீது தாழ வளைந்திருக்கும் கிளைகளையுடைய மருத மரத்தின், பூங்கொத்துக்கள் உதிராநிற்கும். இரவலர்க்குக் கொடைமப் பொருளாகத் தேர்களையே வழங்கும் வள்ளலாகிய விரான் என்பானுக்குரிய சிறந்த இருப்பையூர் போன்ற என் அழகெல்லாம் கெடுவதாயினும் கெடுக என்னை நெருங்கு உன்னை விடுவேனல்லேன், நெருங்கவிட்டால், என்வாய், உன்னை விலக்கினும், என் கைகள் உன்னை அணைத்துத் கொள்ளும். ஆனால், நீயோ பரத்தையின் மார்பால் மாசு பட்ட சந்தனம் பூசப்பட்ட மார்பினை உடையாய்; அப்பரத்தை தழுவியதால் வாடிய மாலையினை உடையாய் , அத்தகைய உன்னைத் தொடுவது, தொடத்தகாதன எனக் கழித்துவிட்ட தாழி முதலாம் கலங்களை எடுத்து ஆள்வதற்கு ஒப்பாகும். ஆகவே என் மனைக்கு வாரற்க உன்னை அணைத்த அப்பரத்தை நெடிது வாழ்க"

வெண்நெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் பழனப் பல்புள் இரியக், கழனி
வாங்குசினை மருதத் தூங்கு துணர் உதிரும் தேர்வண் விராஅன் இருப்பை அன்ன என் தொல்கவின் தொலையினும் தொலைக ; சார விடே என் ; விடுக்குவ னாயின், கடைஇக் கவவுக்கை தாங்கும் மதுகையம் குவவுமுலை சாடிய சாந்தினை வாடிய கோதையை ;
ஆசில் கலம் கழிஇ யற்றும் :
வாரல் வாழிய! கவைஇநின் றோளே" .

-நற்றிணை 350

கணவன் பிழையை, மனைவி, ஒரோவழி மன்னித்து, அவனை ஏற்றுக் கொள்வதும் உண்டு. "பாணனே : அருகே வருக ! நல்ல அணிகலன்களை அணிந்த என் மனைவி, சுற்றத். தார் அனைவரும் கூடியிருந்து ஓம்ப, முதல் சூல் உடையாளாகி