பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை கி. பி. ... ஆண்டுகள்

453


மகவு ஈன்று, நம் குடிவளர வழிசெய்து, தெய்யோடு கலந்த வெண்சிறுகடுகாம் விதைகளை நம் மாளிகையெங்கும் விளங்கப் பூச, பாயலில் படுத்திருந் தவளை நெருங்கி அழகிய கூந்தலை உடையாய் என அழைத்து, மகளை ஈன்றதனால், தாய் எனும் புதுப்பெயரும் பெற்று, வரிகளும் தித்திகளும் உடைய அல்குலும் உடைய முதுபெண்டுமாகித் துயிலா நின்றனையே ! என்னே நின் சிறப்பு! எனப் பலப்பல கூறிப் பாராட்டி, மகவு ஈன்று மாண்புற்ற அவள் அழகிய வயிற்றை, என் கைக்குவளை மலரால் தடவிக் கொடுத்து ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தேன் போல் சிறிது பொழுது அங்கு நின்றிருந்த என்னை, மெல்ல நோக்கி, முல்லையின் அரும்புகள் போலும் பற்கள் தோன்ற சிறிதே நகைத்துப் பின்னர், வெட்கம் வந்துறவே, நில மலர் போலும் கண்களைத் தன் கைகளால் மூடிக்கொண்டு மகிழ்ந்த காட்சி. எனக்கு நகை தருவதாய் இருந்தது. அது குறித்து நகைத்து மகிழ பாணனே வருக'.

'

வாராய் பாண நகுகம், நேரிழை
கரும்புடைக் கடுஞ்சூல் நம் குடிக்கு உதவி, நெய்யோ டிமைக்கும் ஐயவித் திரள்காழ் விளங்கு நகர் விளங்கக் கிடந்தோள் குறுகிப், புதல்வன் ஈன்றெனப் பெயர்பெயர்த்து, அவ்வகித்
திதலை அல்குல் முது பெண் டாகித், துஞ்சுதியோ ? மெல் அஞ்சில் ஒதி எனப் பன்மாண் அகட்டில் குவளை ஒற்றி உள்ளினென் உறையும் எற்கண்டு, மெல்ல முகை நாண் முறுவல் தோற்றித்
தகைமலர் உண்கண் புதைத்து உவந் ததுவே'

-

நற்றிணை: 370

தலைவியின் சினம் பெரும்பாலும் தணிவது இல்லை; அவன் வாயில் வேண்டிப் பாணர் நண்பனைத் தூதுயாக்கிலும், அது பயன் அளிப்பதில்லை. சினம் மாறா ஒரு