பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் பண்டை நாகரீகத்தின் நிலஇயல் அடிப்படை 33 கோன்' என்ற சொல். ஆயர் மகன் எனும் பொருள்படும். அதுபோலவே அரசியைக் குறிக்கும் ஆய்ச்சி' என்ற சொல் ஆயர் மகள் எனும் பொருள்படும் என்ற உண்மை நிலையால், தமிழ்நாட்டில் முதன்முதலில், முல்லையில், கால்நடை மேய்ப்பாளராகிய ஆயரிடையேதான், அரசு முறை தோன்றிற்று என்பது, தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டு விட்டது. 'கோன்' என்ற சொல், ஆயர்களின் அடையாளச் சின்னமாம் கைத்தடியைக் குறிக்கும் கோல்' என்ற சொல்லி விருந்து பிறந்ததாகத் தெரிகிறது. அரச ஆணையின் சின்ன மாகிவிட்ட அரசர்கைச் செங்கோல் ஆடுமாடுகளை மேய்க்க உதவும் வெறும் கோலே ஆகும். மத்திய ஆசிய அடுக்குகளில் உள்ளதுபோன்ற, இந்தியா வுக்கு அப்பாற்பட்ட நாடுகளின் கால்நடை மேய்ப்பு வாழ்க்கை, தென்னிந்திய மேய்ப்பாளரிடம் முல்லை நிலத்து ஆயர் வாழ்க்கையிலிருந்து, கூடாரங்களைப் பயன் கொள்ளு த ல், ஒரு மேய் நிலப்பகுதியிலிருந்து பிறிதொரு மேய்நிலப் பகுதிக்கு எனக் கால்நடை மேய்க்கும் பழங்குடியினர் தொடர்ந்து இடம் பெயர்ந்துகொண்டே இருத்தல் ஆகிய இருநிலைகளின் வேறுபடுகிறது. ஆண்டு முழுதும், தட்ப வெப்ப நிலை ஒரே சீராக இருப்பதால் தென்னிந்தியாவில், கூடாரங்களின் கண்டுபிடிப்பு தேவையற்றதாகிறது. உடைந்த பானை ஓடு மூடப்பட்ட மூங்கில் கற்களால் முட்டு கொடுக்கப்பட்ட, உலர்ந்த கொம்புகளாலான பந்தல் மீது வேயப்பட்ட விசிறி வடிவிலான ஒரு சில பனை ஒலைகள், ஒரு மனித னுக்கும் அவன் கால்நடைக்கும் காப்பளிக்கப் போதுமான தாக நிரூபிக்கப்பட்டுவிட்டன. நிலத்தின் வளமும், காலந் தோறும் பெய்யும் பருவ மழையும், ஆண்டுக்கு ஒரே நிலத்தில் புல் பூண்டு விளைவை உறுதி செய்தன. ஆகவே, வடக்கத்திய அடுக்குகளில் உள்ளதுபோல், ஒரு குடியிருப்பைச் சூழ இருந்த புல், கால்நடைகளால் மேயப்பட்டுவிட்டபோதோ, கோடை ஞாயிற்றால் எரிக்கப்பட்டுவிட்டபோதோ, கூடாரத் தைப் பிரித்துக்கொண்டு, புதிய மேய்ச்சலிடம் தேடிச்செல்ல வேண்டியது தேவையற்றதாகி விட்டது. ஆகவே தென் ,