பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

458

தமிழர் வரலாறு

வாங்கிக் கொள்ளுங்கள் என, வழிநடையில் வாரி வழங்கினான்”;

“வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான்நிணப் புழுக்கோடு
ஆன்உருக் கன்ன வேரியை நல்கித்,
தன் மலைப் பிறந்த தாவில் நன்பொன்
பன்மணிக் குவை யொடும் விரைஇக் கொண்மெனச்,
கரத்திடை நல்கி யோனே”;
(புறம் : 1.52 : 25-30)

கடற்கரைத் துறைமுகங்கள் :

கிறித்துவ ஆண்டின் தொடக்கத்தில், உரோமாபுரியோடு தடைபெற்ற வாணிகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியோடு, கடற்கரை நகரங்களும் மிகவும், முக்கியத்துவம் உடையவாக உயர்ந்துவிட்டன. அவ்வாறே இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. கிழக்குக் கடற்கரையில் வடகோடியில் குறிப்பிடக் கூடியது, பிற்காலத்தில் மல்லை என்றும், மேலும் பிற்பட்ட காலத்தில் மகாபலிபுரம் என்றும் அழைக்கப்பட்டதான மாவிலங்கைத் துறைமுகமாம். “விளையாடும் கூட்டமாகிய சிறந்த தொடி அணிந்த மகளிர், பன்றிகள் உழுது சேறாக்கிய மண்ணைக் கிளறினால், அதன்கண் புலால் நாறும் ஆமை முட்டைகளையும், தேன் நாறும் ஆம்பல் கிழங்குகளையும் பெறும் மண்வளமும், இழும் எனும் ஒலி ஓயாது ஒலிக்குமாறு நீரை வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கும் மதகுகளைக் கொண்ட நீர் வளமும் உடைய பெருமைமிக்க மாவிலங்கை”.

“ஓரை ஆயத்து ஒண்தொடி மகளிர்,
கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்,
யாமை ஈன்ற புலவுதிாறு முட்டையைத்
தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறுஉம்
இழும் என ஒலிக்கும் புனலம் புதவின்
பெருமா விலங்கை”.
- புறம் :176 : 1.6