பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

462

தமிழர் வரலாறு

நறவு மகிழ் இருக்கை, நற்றேர்ப் பெரியன்
கள்கமழ் பொறையாறு’
-நற்றிணை 131 : 7 - 8

பாண்டியரின் முக்கியத் துறைமுகம், கொற்கை அது முத்துக்கள் விளைகின்ற பரந்த கடலையுடைய கொற்கை நகரத்து முன்புள்ள துறைமுகம்! முத்துப்படு பரப்பின் கொற்கை முன்துறை (நற்றிணை : 23 : 6) என்றும், வீரம் செறிந்த போரில் வல்ல பாண்டியர்கள், அறநெறி கெடாது காக்கும் அழகிய கொற்கைப் பெருந்துறையில் கொள்ளும் முத்து; மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கை அம் பெருந்துறை முத்து (அகம் : 27 : 9 - 10) என்றும், வீசும் அலைகள் கொண்டுவந்து குவிக்கும், குளிர்ந்த இனிய ஒளியினையுடைய முத்துக்கள், ஊர்பவர் விரும்புமாறு நடக்கும் குதிரைகளின் கால் வடுக்களை மறைக்கும் நல்ல தேரையுடைய பாண்டியரது கொற்கை. இவர் திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம், கவர்நடைப் புரவிக் கால்லடு தபுக்கும் நற்றேர் வழுதி கொற்கை (அகம் : 1.30: 9 - 11) என்றும், வெற்றியே காணும் போரில் வல்லவர்களாய பாண்டியரது, புகழ் மிக்க சிறப்பினையுடைய கொற்கை முன்துறையில் கிடைக்கும் ஒளி வீசும் முத்துக்கள் : விறல் போர்ப் பாண்டியன், புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை அவிர் கதிர் முத்தம் (அகம் : 201 : 3 - 5) என்றும், கடல் நீர்ப் பரப்பில் சென்று, பல மீன்களையும் பிடிப்பவர், அவற்றுடன் சேரக்கொண்ட முத்துச் சிப்பிகளை, நாரால் வடித்து எடுத்தப் பட்ட கள்ளின், மகிழ்ச்சி மிக்க விலையாகக் கொடுக்கும், மிக்க புகழ் வாய்ந்த கொற்கை, பரப்பில் பன் மீன் கொள்வர் முகந்த சிப்பி, நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும் பேரிசைக் கொற்கை’' (அகம் : 298 ; 8 . 10) என்றும், விளங்கும் பெரிய கடலில், எதிர்த் தாரைக் கொல்லும் சுறாமீன்களை நீக்கிவிட்டு வலம்புரிச் சங்குகளை மூழ்கிக் கொணர்ந்த பெரிய மீன் பிடி படகுகளை உடைய பரதவர், பிடித்த அச்சங்குகளின் கல்லெனும் ஒலியினை முழக்க ஆரவாரம் மிக்க கொற்கை நகரத்தார் வரவேற்கக் கரை சேர்வர்' என்றும் பாராட்டப்பட்டுளது: