பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

464

தமிழர் வரலாறு

கலம் தந்த பொற்பரிசம்
கழித்தோணியால் கரை சேர்க்குந்து ;
மலைத்தாரமும் கடல்தாரமும்
அலைப் பெய்து வருநர்க்கு ஈயும்
புனலம் கள்ளின், பொலந்தார்க் குட்டுவன்,
முழங்கு கடல் முழவின் முசிறி”;
-புறம் : 343 : . 10:

கடற்கரை வாழ் மக்கள், கடலில் கலங்கள் கவிழ்ந்து போவதை அறிந்திருந்தனர். அதனால்தான் அடுத்துவரும் பாட்டில், அழகிய உவமை இடம் பெற்றுளது. “பாணன் கையில் உள்ள, யாழுக்கு உரிய இலக்கணப் பண்புகளோடு கூடிய நல்ல யாழ், அழகிய வண்டுகள் போல இம் எனும் இசை எழும், நீ வழக்கமாக வரும் தெருவில், நீ வருவதை எதிர் பார்த்து உன்மார்பை, முன்பு தமக்கு உரியதாகப் பெற்றிருந்த, சிறந்த அணிகளை அணிந்திருந்த பரத்தையர் பலரும், நீ கைவிட்டு விட்ட கவலையால், கண்களிலிருந்து வெப்பம் மிகுந்த கண்ணிர் சொரிந்தவாறே, கொடிய புயல்காற்று கடுமையாக வீசுவதால் துன்புற்றிருந்தபோது, கடலில் தாம் ஏறியிருந்த மரக்கலம் கவிழ்ந்துவிட, மேலும் கலக்கமுற்றுத், தாமும் ஒரு சேரக் கடலில் வீழ்ந்து, ஆண்டு மிதந்துவந்த ஒரு பலகையை, வீழ்த்த அனைவரும் ஒருசேரப் பற்றிக்கொண்டு, தாம் தாம் தனித்தனி இழுப்பது போல, உன் கைகளைப் பற்றி, அவரவர் தத்தம் பக்கம் இழுக்க, அவரிடை அகப்பட்டு நீ வருந்திய வருத்தத்தை நான் கண்கூடாகக் கண்டேன் : கண்ட என்னால் யாது செய்ய இயலும்?”

“கண்டனென்; மகிழ்ந! கண்டு எவன்செய்கோ ?
பாணன் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென் இமிரும்
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி, நின்
மார்புதலைக் கொண்ட மாண் இழை மகளிர்,
கவலே முற்ற வெய்து வீழ் அரிப்பனி,