பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. முதல் ஐந்நூறு ... வாணிகம்

471

ஏற்கெனவே உள்ள, குறிப்பிடத்தக்க பட்டியலோடு சேர்த்து எண்ணப்பட வெண்டும் (Warmington, Page : 163 ) தென் இந்தியா அனுப்பிய இப்பண்டங்கள், முசிறி, நெல்கியத்தா (Nelcynda) ஆகிய இடங்களிலிருந்து அனுப்பப்பட்டன (Periplws ; Page: 56). உரோமப் பேரரசின் தொடக்கத்திலிருந்தே, இந்திய ஆமை ஒடுகள் அடிக்கடி பேசப்படும் விலை உயர்ந்த தட்டுமுட்டுப் பொருட்களின், மேலாடைப் பகட்டு மெல்லொட்டுகளாகிப் பயன்படுத்தப்பட்டது. இதில் ஒரு பகுதி, இந்தியக் கடற்கரைகளைச் சேர்ந்த கடலாமைகளிலிருந்து பெறப்பட்டது. மலேயா தீபகற்பத்தைச் சூழ உள்ள கடலிலிருந்தும் பெறப்பட்டுளது (Warmington Page , 166, 167.).

உரோமப் பேரரசால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த விலங்குதருபொருள்கள், மன்னார் வளைகுடாவில் கிடைக்கும் முத்து, உரோம வணிகர், அதை வாங்கும் மதுரையும், உறையூரும் முக்கிய முத்து அங்காடிகளாம். அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த யூத தத்துவஞானி, பிலோன் (Philon) முனிவர் பால் (St. Paul) ஆகியோர் உள்ளிட்ட, மக்களுக்கு நல்லற வாழ்வு போதிக்கும் அறவோர்கள் பலரும், பெண்டிரும், மகளிரும் முத்து அணிவது குறித்து, வெறுத்துப் புலம்புமளவு, முத்து அணிவது, மகளிரிடையே நவநாகரீகமாக ஆகிவிட்டது.

உரோமப் பொன் அழிவு :

“ஒரு சீர்திருத்தம் உண்மையில் தேவை என்றால், அது எங்கிருந்து தொடங்கப்படவேண்டும் ? பெண்களின் டம்பப் பொருளாகிவிட்ட, அவ்வியத்தகு பொருளைக் குறிப்பாக நம் பேரரசின் செல்வவளம் அனைத்தையும் அறவே வற்றச் செய்யும் பயனிலாப் பகட்டுப் பொருள்களுக்கு விலையாக, வெளி நாடுகளுக்கு, நம் குடியரசின் வாரி வழங்கப் பண்ணும். பேரணிகள், மற்றும் விலைமதிக்க ஒண்ணாச் சிற்றணிகள் பால், நம் மகளிர் கொண்டிருக்கும் மட்டுமீறிய வேட்கையை நாம் எவ்வாறு சந்திக்கப் போகிறோம் ?” எனப் பேரரசர்