பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

474

தமிழர் வரலாறு

தேனடை என அழைக்கப்பட்ட வெல்லம் ஆகியவை சிறு வணிகப் பொருள்களாம் (Warmington : Page : 209).

தென்னிந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பண்டங்களில், பருத்தி உடைகள் பெரிய இனமாம்: பெரிபுளுஸ் அவர்களால் “அர் கரு” (Argarw) என அழைக்கப்படும் உறையூரிலிருந்து, இன்றைய திருச்சிராப்பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட “அர்கரிடிக்” (Argalitic) மென்துணி, அவற்றுள் சிறப்பானது (Warmington : Page : 59). தென்னிந்தியாவிலிருந்து பருத்தியும் ஏற்றுமதி செய்யப்பட்டது. “டையோக்லெடியன்” (Diocletion) அவர்களின் ஆணை, திணிக்கப்பட்ட மெத்தை, தலையணைகள், இந்தியப் பருத்தியிலிருந்து செய்யப்பட்டனவாகக் காட்டுகிறது. இந்திய உடைகள் பலவற்றைப் பாலஸ்தீனமும் வரவழைத்தது” {Warmington Page : 212).

இந்தியாவிலிருந்து உரோமர்கள் இறக்குமதி செய்த மரங்களில் சில, அழகு பொருட்களாவன ; சில கட்டிடங்களுக்காவன ; மற்றவை, நறுமணத்தைலம், மருந்துகள் செய்யப் பயன்படும் மணம்தரு மரங்கள். முன்னதில் சிறப்பானவை, கருங்காலி, செம்மரம், தேக்குகள் (Periplws : Page : 36 . பின்னவற்றில் சிறந்தன, சந்தனமரம், செஞ்சந்தன மரம், அகில், தெல்லச்சேரி மரப்பட்டை, முதலியன (Warmington Page . 215.216). தேங்காய் எண்ணெய் ஏற்றுமதிக்குப் பெரிபுளுஸ் அவர்களும், வாழை, அரிசி, தினை, சாதிக்காய் போலும் மருந்தாகப் பயன்படும் மரம் தரு பொருள்கள், புளி ஆகியவற்றின் ஏற்றுமதிக்குப் பிளைனி அவர்களும் சான்று பகர்கின்றனர். வெற்றிலையும் பாக்கும் கூட, பல்வேறு எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனிப்பொருள்களிலான வாணிகம் :

முசிறி, நெல்கியந்தா (Nelcynda) ஆகிய இடங்களிலிருந்து, ரோமுக்கு அனுப்பப்பட்ட, கனிப்பொருள் வகை உற்பத்திப் பொருட்களில், வைரம்தான், மிக மிக விலை