பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

இந்திய நாட்டு வரலாறு பெரும்பாலும் வட இந்திய வரலாறாகவே அனைத்து வரலாற்றாசிரியர்களாலும் எழுதப்பட்டுள்ளது. சமய தத்துவ, பண்பாட்டு வரலாறுகள் என்று எடுத்துக்கொண்டால் கூட பெரும்பாலும் தென்னிந்தியர், குறிப்பாகத் தமிழ்நாடு எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டே வருகிறது. ஐயாயிரம் ஆண்டுகட்கு மேலாகத் தொடர்ச்சியான வரலாறுடைய தமிழ் மக்களின் உண்மை வரலாறு உலகுக்கு எடுத்துக் கூறப் பெறவேயில்லை.

சென்ற நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கு வருகை தந்த மேனாட்டுப் பாதிரிமார்களான இராபர்ட் கால்டுவெல், டாக்டர் ஜி. யு. போப், எப். டபிள்யூ எல்லிசு, இராபின்சன், பெப்ரீசியசு, இராடலா, வின்சுலோ போன்ற அறிஞர்கள் தமிழின் பெருமையை ஆங்கிலத்தின் வாயிலாக வெளிப்படுத்தினர். அதன் பின்னரே தமிழ் மக்களுக்கே தங்களைப் பற்றியும் தங்கள் மொழியின் பெருமையைப் பற்றியும் தெரிய வரலாயிற்று:

இவர்களைத் தொடர்ந்து வி. கனகசபை, சைமன் காசி செட்டி, மறைமலையடிகள், மு. சீ. பூரணலிங்கம் பிள்ளை, பி. டி. சீனிவாச அய்யங்கார், வி. ஆர், இராமச்சந்திர தீட்சதர், கே. ஜி. சேஷய்யர், கா. சுப்பிரமணிய பிள்ளை, ந. சி. கந்தையா, சதாசிவ பண்டாரத்தார், ஞா. தேவ நேயப்பாவாணர், க. அ. நீலகண்ட சாஸ்திரி, அவ்வை துரைசாமிப் பிள்ளை, டாக்டர். கே. கே. பிள்ளை, மா. இராசமாணிக்கனார், கா. அப்பாத்துரையார் போன்ற பேரறிஞர்கள் பலர் தமிழர் வரலாற்றை விரிவாக ஆயத்தொடங்கினர்.

இத்தகைய பேரறிஞர்கள் பலர் உழைத்தும் இன்னும். விரிவான, உண்மையான தமிழர் வரலாறு சரியான முறையில்