பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் பண்டை நாகரீகத்தின் நிலஇயல் அடிப்படை 25・ விடுத்தது. கடலோரத்தில் மீன் பிடிப்பதிலிருந்து மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றனர். கடற்கரைச் சூழல், அங்கு. வாழ்பவராகிய பரதவர்களைப், படகு கட்டுவோராகவும், மீனவர்களாகவும் ஆக்கிவிட்டது. மிதப்பதற்கு ஏற்ப, ஒன்றாக இணைக்கப்பட்ட பருத்து நீண்ட இரு மரத்துண்டுகளால் ஆன, பழங்காலத்தெப்பங்களே, முதன்முதலாகக்கண்ட படகுகளாம். பிரம்பினால் பின்னப்பட்டு கடல், விலங்கின் தோலால் மூடப்பட்ட கூடையாம் தோணி, அல்லது பரிசில் அடுத்து இடம் பெற்றது. இந் நிலத்து முக்கிய விளை பொருள்கள் மீனும், உப்புமாம்.பரதவர் அவற்றை அகநாடு களுக்குக் கொண்டுசென்று, பிற உணவுப்பொருள்களுக்காகப் பண்டமாற்று முறையில் தரவேண்டியதாயிற்று, அவர்களின் இச் சுற்றுச்சூழல், பரதவர்களை வணிகர்களாக ஆக்கிற்று. அப் பரதவர் அவர்களின் வழிவந்தவராய, இன்றைய பலிஜி" களைப் போலவே தங்கள் விற்பனைப் பொருள்களை, இரட்டை மூட்டைகளாகக் கட்டிப் பொதி எருதுகளின் முதுகு களில் ஏற்றிக்கொண்டு சதுப்புநிலப்பாதைகளை வருந்திக் கடந்து, ஆற்றுப்பாய்ச்சலால் வளம்பெற்ற நாட்டு விளை பொருட்களுக்காக மாற்றுப்பண்டமாகக் கொடுப்பர். இப் பரதவர் குடியிலிருந்தே மேற்கே ஆப்பிரிக்க, அராபிய நாடு களுக்கும், கிழக்கே மலாய், சீன நாடுகளுக்கும், இந்திய வணிகப்பொருள்களைப் படகுகளில் கொண்டுசென்ற பண்டைய இந்திய மாலுமிகள் தோன்றினர்; உழவர் : முல்லைக்கும் நெய்தலுக்கும் இடைப்பட்ட, தாழ்வான சமவெளியாம் மருதமே, மக்கள். இறுதியாகக் குடிவாழத் தொடங்கிய நிலப்பகுதியாம். அது நிகழ்ந்தது பழங்கற்கால இறுதியில். புதிய கற்கால நாகரீக காலத்தோடு இன்றைய புதிய நாகரீக வாழ்க்கை தொடங்கிவிட்டது. கால்நடை வளர்க்கும் முல்லை நாகரீகப்பருவத்தில் தொடங்கிவிட்ட, மரம், செடி, கொடிகளைக் குறிப்பாக நெல், வாழை, கரும்பு. மா ஆகியவற்றை, மனித வாழ்விற்குப் பயன்கொள்ளும்நிலை, இம் மருத நாகரீகநிலையில் முழுமை அடைந்துவிட்டது.