பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

480

தமிழர் வரலாறு

பகுதித் துறைமுகங்களிலிருந்து சொலந்தியா’ (Colandia) எனப்படும் பெரிய கப்பல்கள், கங்கை, மற்றும் ‘செர்ய்செ’ {Cherse) அக்காலை, சுவண்ண பூமி என அழைக்கப்படும் பர்மா ஆகிய இடங்களுக்குச் சென்றதாகப் பெரிபுளுஸ், கூறுகிறார். “தமிரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒவ்வொரு பொருளும், எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட பொருள்களின் பெரும்பகுதியும் தமிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருள் அனைத்திலுமான எல்லா இனங்களும், இன்றைய திருவாங்கூடரான, பரலியா (Paralia) வழியாகக் கொண்டுவரப்பட்டனவும், அந்நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்டன. (Periplus Page : 30)

மதுரையில் ஒரு ரோமானியர் குடியிருப்பு :

இந்தக் கால கட்டத்தில் மதுரையில், உரோமானியக் குடியிருப்பு ஒன்று இருந்தது. தென்னிந்தியாவின் பல இடங்களில், பொன், வெள்ளிகள் மட்டுமல்லாமல், உரோம நாணயங்களும் காணப்பட்டதால் “மதுரையில் நகருக்கு அணித்தாக உள்ள வெற்றிடங்களிலும், வெள்ளம் வற்றிப் போகும் காலத்தில், ஆற்றுமணல் மேடுகளிலும், எண்ணற்ற செப்பு நாணயங்களும் காணப்பட்டன, அந்நகரின் பல்வேறு இடங்களில், மண் மீதும், ஆற்று மணல் மேடுகளிலும் உரோமச் செப்பு நாணயங்கள் சிதறிக்கிடப்பது, இந் நாணயங்கள், ஆங்கு, அன்றாடப் பழக்கத்தில் இருந்து வந்தன, ஆங்குக் குடிவாழ்ந்திருந்த மக்களால், கவனக் குறைவால், போடப்பட்டன அல்லது தொலைக்கப்பட்டு விட்டன என்பதை அறிவுறுத்துவதாகத் தெரிகிறது. (Journal of the Royal Asiatic Society 1906 Page : 610).

இச்செப்பு நாணயங்கள், இவ்விடங்களுக்கு, உரோமானியர்களால், தங்களுடைய சொந்த உபயோகத்திற்காகவே கொண்டுவரப் பெற்றிருக்க வேண்டும், அவை, பொன், வெள்ளி நாணயங்களைப் போல, இந்தியக் கடைவீதிகளில், பொருளுக்கு விலையாகக் கொடுக்கும் நாணயமாகப் பயன்