பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. முதல் ஐந்நூறு...வாணிகம்

481

படுவதற்குக் கொண்டு வரப்பட்டிருக்காது. காரணம், அந்நாணயக்குவியலுக்குக் கப்பல்களில் இடம் காண்பது இயலாதாகிவிடும்; மேலும், அக்காலத்தில். இந்தியா, தனக்கு வேண்டிய செப்பு முழுவதையும், தன் நாட்டுச் சுரங்கங்களிலிருந்தே பெற்றுக்கொண்டது; ஆகவே, இச்செப்பு நாணயங்கள், பாண்டங்களும், பிற பயனுள்ள பொருள்களும் செய்வதற்கு உருக்குவதற்காக, இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் என்பதும், முன்னதைப் போலவே பொருளில் கூற்றாம்; தாலமி காலத்துக்கு ஏறத்தாழச் சிறிது முந்திய காலத்தில், ரோம் நகரில் இருந்த சுவர் வண்ண ஒவியங்களிலிருந்து படி எடுத்த நிலப்படங்களாகிய ‘பெயுதிங்கேரியன்’ (Pewthingorian) கல்வெட்டுக்கள், மேற்குக் கடற்கரையில், முசிறிக்கு அருகில், அகஸ்டஸ் கோயில் ஒன்றை இடம் சுட்டுகிறது. தம்முடைய நில இயல் நூலை கி. பி. 150இல் தொகுத்த தாலமி, தாம் அறிந்த செய்திகளில் ஒரு பகுதியை, இந்தியாவில் நெடுநாட்கள் வாழ்ந்திருந்தவரிடமிருந்து பெற்றதாகக் கூறியுள்ளார், இவைபோலும் உண்மைகள், உரோம வணிகர்களின் குடியிருப்புகள், தமிழ்நாட்டின் பல்வேறு வணிக மையங்களில் இருந்தன என்பதை உறுதி செய்கின்றன.

தென்னிந்தியாவில் உரோமர்கள் :

உரோம வணிகர்கள், உரோம வீரர்கள், உரோமக் கைவினைஞர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்திருந்தனர் என்பதை உறுதி செய்யவல்ல ஏராளமான அகச்சான்றுகள், அக்காலத்திய தமிழ் இலக்கியங்களில் உள்ளன. உரோம வணிகர்கள், மது, பொற்கசு ஆகியவற்றைத் தென்னிந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். கிரேக்கர், அந்நாட்களில், உலக நாடுகளுக்கிடையில் கொண்டிருந்த உறவு நிலையில், புறக்கணிக்குமளவு தாழ்ந்து விட்டனராதலின், தொடக்கத்தில், கிரேக்கரைக் குறிக்க வழங்கிய, யவனர் என்ற சொல், இக்காலத்தில் ரோமரையும் குறிக்கும் வகையில் விரிவு பெற்றுவிட்டது. ஒரு பாட்டு,

த.வ.-31