பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

490

தமிழர் வரலாறு

படுவார், பாண்டியர் ஆவர்: “சொரெடோயி” (Soretoi} யும், அதைத் தொடர்ந்து வருவனவும் சோழர் ஆவர். “படோயி” (Batoi) எனப்படுவார், தென்கிழக்குக் கடற்கரையைச் சேர்ந்த பரதவர் ஆவர். “அருவர்னோயி” (Arw arnoi) எனப்படுவார், கிழக்குக்கரை மாவட்டங்களாம், தென்னார்க்காடு, .செங்கற்பட்டு, வடார்க் காடு மற்றும் நெல்லூர் மாவட்டங்களைக் கொண்டு அருவா நாட்டினரான அருவாளர் ஆவர். “சொரெ டோயி” (Soretoi) என்பதன் மற்றொரு பெயராகத் தாமி அவர்கள் குறிப்பிடும் “தொரிங்கோயி” (Thoringai) என்பது சோழர் அல்லது சோழியர் என்பதன் திரிபுச் சொல்லாம். “டிமிரிக்கே” {Dymirike) · “பாண்டியோநோயி” (Pandiouoi) “சோரெடோயி” (Soretoi) “அருவர்னோயி” (Arwvarnei) என்ற நாடுகளை முறையே ஆளும், “கெரபோத்ரோஸ்” (Kerabathros) (அசோகன்கல்வெட்டில் வரும் கேரள புத்ரர்), பாண்டியன் (Pandion) “சொர்னகோஸ்” (Sornagos) “பஸர்னகோஸ்” (Basartagos) என்ற நான்கு அரச இனங்களைத், தாலமி குறிப்பிடுகிறார். கடைசி இரு பெயர்களின் ஈற்றில் வரும் “னகோஸ்” (Naguos) என்பதை “ராஜா” என்பதன் பிழைவடிவாகக் கொண்டாலல்லது அதன் பொருளை உணர்ந்து கொள்வது அறவே இயலாது. கடைசியில் வரும் அரச இனத்தைக் குறிக்கும், “பஸர்னகோஸ்” என்ற பெயர், இரு தமிழ் அரச இனத்தின் பெயராவது அறவே பொருந்தாது. தாலமியின் காலத்தில், “அருவார்நோயி” நாட்டைப் பல்லவர் ஆளத் தொடங்கியிருக்கக் கூடும். அங்ஙனமாயின், “பஸர்னகோஸ்” என்பது, “பல்லவராஜா” என்ற சொல்லின் திரிபு வடிவாதல் கூடும். இவ்வரச இனங்களின் தலைநகர்கள், தாலமியால், கூடுமானவரை சரியாகவே கொடுக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு நகரங்களான அவை வருமாறு : கரூரைக் குறிக்கும் “கரௌரா” (Karoura), மதுரையைக் குறிக்கும் “மொதெளரா” (Modowra) உறையூர் அல்லது உறந்தை அல்லது சமஸ்கிருதத்தில் உறகபுராவைக் குறிக்கும் “ஒர்தொரா” (Orthowra), காஞ்சீபுரம், அல்லது காஞ்சீ