பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

492

தமிழர் வரலாறு

உண்மையை இப்பெயர் சுட்டுகிறது. அடுத்து கூறப்பட்டிருப்பது, திமிரிக்கேவுக்குத் தெற்கில் உள்ள “பரீஸ்” (Baris) என்பதாம். இது, உறுதியாகப் பருவூர் ஆறே; அடுத்தது, “கொல்கோஹி”க்கு வெகு தொலைவில் இல்லாத “சோலென்” (Solen) என்பதாம். இது, கொற்கைக்கு அருகில் ஒடும், தாம்பிரபரணி ஆற்றின் தமிழ்ப் பெயராம் பொருநை என்பதன் பிழை வடிவேயாம். தாலமி குறிப்பிடும் அடுத்த ஆறு, காவேரியைக் குறிக்கும் “கபெரோஸ்” என்பதாம். அந்த ஆற்றின் தமிழ்ப் பெயராம் காவிரி என்பதில் இருப்பது போலல்லாமல், அதன் சமஸ்கிருதப் பெயராம் காவேரி என்பதில் இருப்பது போலவே, இச்சொல்வில் நெடில் ஏகாரத்தைக் தொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாம்.காரணம் டியோன் செரிஸோஸ்டம் (Dion - Chrysostum) அவர்கள் கூற்றுப்படி, கி. பி. 100இல் அலெக்ஸாண்டிரியாவில் இருந்த பிராமணக் குடியிருப்பைச் சேர்ந்த பிராமணர்களிடமிருந்து, அல்லது, அப்பிராமணர்கள் அறிவுரைப்படி வந்த வணிகர்களிடமிருந்து, காவிரி பற்றிய செய்தியைத், தாலமி அறிந்திருக்க வேண்டும். தென்னிந்தியாவில் அவர் குறிப்பிடும் ஆறு “டைரே” (Tyre) என்பதாம். கிரேக்க மொழியில் பகரத்திற்குப் பதில் மகரம் இடம் பெற்றுவிடுவது எளிதில் நிகழ்ந்துவிடும் பிழையாகும் ஆதலின் இது, பெண்ணையாறு என்பதன் வழக்காம் “பென்னெர்” என்பதன் திரிபே ஆகும். கடற்கரையிலும், உள்நாட்டிலும் இருந்த, பல நகரங்கள் பல வணிக நிலையங்களின் பெயர்கள், தாலமியால் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின் இடங்களை அடையாளம் காண்பதில், ஏராளமான, தவறான கற்பனைக் கருத்துக்களெல்லாம் செலவழிக்கப்பட்டன என்றாலும், அம்முயற்சி அனைத்தும் பயனில என்பது உறுதியாகிவிட்டது.

நீரோவின் இறப்பிற்குப் பின்னர் உரோம வாணிகம் :

அரியணை உரிமை குறித்து ஏற்பட்டுவிட்ட பகைமை,அது தொடர்ந்து ஏற்பட்டுவிட்ட உள்நாட்டுப் போர்கள் காரணத்தால், நீரோவின் இறப்பிற்குப் பிறகு,