பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. முதல் ஐந்நூறு ... வாணிகம்

493

நவரத்தினங்கள், நனிமிகு நேர்த்தியான மென்துணிகளிலான வாணிகம் குறையத் தொடங்கிவிட்டது. வெஸ்பாஸியன் (Uespasion) பேரரசன் ஆனதும், தேவைக்கு மேலிருந்த உயர் நாணயங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை வெளியிட்டான். ஆடம்பர வாழ்வின் இடத்தைத் தன்னல மறுப்பு நிலை கைப்பற்றிக் கொண்டது. என்றாலும், இந்தியவாணிகம் அடியோடு அழிந்துவிடவில்லை. உரோமப் பேரரசின் புகழ் குன்றத் தொடங்கிய காலத்தைச் சேர்ந்த உரோம நாணயங்கள், தென்னிந்தியாவில் காணப்படாமையால், தமிழர், உரோமானியரோடு நடத்திய வாணிகம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில், அடியோடு அழிந்துவிட்டதாகச், சில ஆசிரியர்கள் கற்பனை செய்துள்ளனர். மிளகு, பருத்தி நூல் இவைகளிலான வாணிகம் தொடர்ந்து நடைபெற்றுவந்தது. ஆகவே, நிலைமை அவ்வாறு ஆகிவிடவில்லை. கி. பி. 408இல் “அலரிக்” (Alaric), உரோம் நகரை அழிக்காமல் விட்டபோது, 3000 பவுண்டு மிளகையும், 4000 பட்டு மேலங்கிகளையும் பிணையப் பொருள்களாகக் கேட்டுப் பெற்றான் என்பதால், இது உறுதிப்படுகிறது. (J . R. A. S.1904. Page. 648) மேலும் , உரோமநாணயங்கள் “கான்ஸ்டன்டைன்” (Constantine) காலத்திலிருந்து வட நாட்டில் காணப்படுவது போலவே, தென்னிந்தியாவிலும் காணப்பட்டன. நான்கு, ஐந்தாம் நூற்றாண்டுகளில் அதன் வருகை அதிகரிக்கவும் ஆயிற்று. “ட்ராஜன்” (Trajan) போலும் கீழ்ப்பகுதியை வலிந்து கைக் கொண்ட ஜுலியன் ( Jwlian) இந்திய அரச இனங்கள் உட்பட, பல்வேறு கீழ்நாட்டு மக்களிடமிருந்து தூதுவர்களை வரவேற்றிருக்கும்போது, கான்ஸ்டைன்டைன், தன்னுடைய வாழ்நாளின் இறுதி ஆண்டில், இந்தியத் தூதுவர் ஒருவரை வரவேற்றான் (Warmington: page : 140)

கி. பி. 376 முதல் “பைசன்டைன்” (Byzantine). பேரரசர்களின் ஆட்சியின் கீழ், பைசன்டைன் மக்களுக்குப், போதிய செல்வத்தைப் போலவே போதிய ஒய்வும் இருந்தது. கீழ் நாடுகளுக்கு அணித்தாக வைக்கப்பட்டமையால், இந்திய