பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

496

தமிழர் வரலாறு

கச்சி என்ற பெயர், கி. பி. ஐந்தாம் நூற்றாண்டைக் சேர்ந்த, இளந்திரையன் புகழ்பாடும் பெரும்பாணாற்றுப் படையில் இடம் பெற்றுளது. ('கச்சியோனே' : வரி : 420). கச்சி என்ற அச் சொல், ஒட்டியாணம் எனப்படும் இடையணியால் பெயர் பெற்ற நகரம் எனும் உண்மையான பொருளுடையதான காஞ்சீபுர என்பதன் குறுகிய வடிவமாம், காஞ்சி என்பதைத் தமிழ்ப்படுத்தியதன் விளைவால் வந்ததாம் காஞ்சியூர்” என்ற சொல், பழந்தமிழ்ப் பாக்களில் இடம் பெற்றுளது; ஆனால், காஞ்சியூர்” என்பதில் வரும் காஞ்சி என்பது, ஒரு மரத்தின் பெயரைத். தெளிவாக உணர்த்துகிறது. அது, காஞ்சீபுரத்தைக் குறிப்பது என்பது அறவே இல்லை:

[காஞ்சீயூர! (காஞ்சி மரங்கள் சூழ்ந்த ஊரைச் சேர்ந்தவனே : (அகம் 96 : 8) இச்சிற்றூர், சோழநாட்டில் உளது. காஞ்சி, மருதத்திணை சார்ந்த செய்யுட்களில் இடம் பெற்றுளது. காஞ்சி நீழல் குரவை அயரும் அகம்:336:9. "காஞ்சியூரன் என்ற தொடர் குறுந்தொகையிலும் இடம் பெற்றுளது.

பயறுபோல் இணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சியூரன்
-குறுந்தொகை : 10 : 2-4;

(பயற்றங்காய்க் கொத்து போன்ற பூங்கொத்திலிருந்து, பசிய பூந்தாதுக்கள், தங்கள் மேல் படியுமாறு, உழவர்கள் வளைத்த, மணம் வீசும் மலர்களைக் கொண்ட மெல்லிய கிளைகளைக் கொண்ட காஞ்சி மரங்களையுடைய ஊரன்) மலர். நீர்த்தாழ்ந்த குறும் காஞ்சி (18 7) என்ற புறநானூற்றிலும், மரம், "காமருகாஞ்சி (351 : 11) என்ற. புறதானுாற்றிலும் வந்துள்ளன).

தமிழரசர்களின் பழைய தலைநகர்கள், உறையூர், வஞ்சி, மதுரை. தமிழ் மரபு, காஞ்சீபுரத்தைத் தமிழரசர்களோடு இணைக்கவில்லை. அது, தமிழ்நாட்டின் எல்லை