பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சீபுர மாவட்டம்

499

கின்றனர்.அப்படியென்றால், கி.மு.களுக்கு முன்னர், ஆந்திர அரசர்கள் இல்லை என்பது பொருளா ? இல்லை ; காரணம், மெகஸ்தனிஸ் கூறும் ஆந்திர நாடு, அதன் சொந்த அரசர்களாலேயே ஆளப்பட்டது. புராணங்களில் வரிசைப்படுத்திக் கூறப்பெறும் கலியுக அரச இனங்கள், ஆரிய வர்த்தத்தால் உணரப்பட்ட- செல்வாக்கினையுடைய அரசர்களை மட்டுமே குறிப்பிடுகின்றன. ஆந்திரர் செல்வாக்கு, ஆங்கு உணரத்தலைப்பட்ட பின்னர், புராணங்கள். கி. மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கி.மு.கள் தொடங்கி, ஆந்திர அரச இனத்து அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடத் தொடங்கின. கி.மு.களுக்கு நெடுங்காலத்திற்கு முன்பே, அதாவது, ஆந்திர நாடு, ஆரிய மயமாக்கப்பட்டு, ஆரிய வாழ்க்கைச் சட்டங்களும், பழக்க வழக்கங்களும், கி.மு. முதல் ஆயிரத்தாண்டின் தொடக்கத்தில் பரவத் தொடங்கிய அந்நாள் தொட்டே, ஆந்திரப் பேரரசுகள் நிலைபேறு கொள்ளத் தொடங்கி விட்டன.

காஞ்சீபுரத்தில் ஆரியச் செல்வாக்கு

காஞ்சீபுர மாவட்டம், ஆந்திரப் பேரரசின் கடைகோடி எல்லை விளிம்பில், உண்மையான தமிழ் மாநிலங்களுக்குச் சற்றே வெளியில் உள்ள ஒரு நிலப்பரப்பாக இருந்தமையால், பெரும்பாலும் அந்நாள் (கி. மு. முதல் ஆயிரத் தாண்டு) தொட்டே, ஆரியச் செல்வாக்கு, அம்மாவட்டத்தின் நுழைந்து இடம் பெற்றிருக்க வேண்டும்; நனிமிகப் பழங்காலந்தொட்டே, காஞ்சீபுரம் ஆரிய தாகரீகத்தின் கருவிடமாம் என்பது, சந்திரகுப்தனின் சிறந்த அமைச்சராம் சாணக்கியன், திராவிடத்தின் அதாவது, காஞ்சியின் குடிமகனாம் என்ற காதுவழிச் செய்தியால், உறுதி செய்யப்படுறது. [Turnour, Mahawamso, Page, 21. J. A. S. B. V. 2; Fowlkes J. R.A.S. p. 1985 p. 209]. சாணக்கியனுக்கு, வாத்ஸ்யாயனன், மல்ல நாகன், குடிலன், த்ரமிளன், பக்க்ஷிலஸ்வாமி, விஷ்ணுகுப்தன், அங்குலன் எனப்