பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

500

தமிழர் வரலாறு

பல பெயர்கள்‌, உண்டு; (Hemachandra quoted by law Anc.Hindu Polity Page, X,XVI,Vide also K.V.Rangasamy Iyengar's Anc. Ind. Polity. Page ː 8,88) மிகப்‌ பெரிய அந்த அமைச்சன்‌, சந்திர குப்தனைப்‌ பேரரசின்‌ அரியணையில்‌ அமர்த்த மட்டும்‌ துணை புரியவில்லை; அர்த்த சாஸ்திரம்‌ மற்றும்‌, காம சாஸ்திரம்‌, தர்ம சாஸ்திரம்‌ மோக்ஷ சாஸ்திரம்‌ என்ற தத்துவங்களின்‌ முழு வட்டத்தையும்‌ எழுதினான்‌ என்ற இக்‌ காதுவழிச்‌ செய்தியை மதிக்க மறுப்பதற்கு எவ்விதக்‌ காரணமும்‌ இல்லை. மேலே கூறிய பல்வேறு தலைப்புகளில்‌ ஆன நூல்கள்‌ அனைத்தும்‌, தனி ஒரு மனிதனால்‌ இயற்றப்பட்டன என்பதில்‌ பொருத்தம்‌ இன்மை எதுவும்‌ இல்லை; தாரணம்‌; விஜய நகரப்‌ பேரரசைத்‌ தோற்றுவித்து ஒழுங்கு படுத்தியவரும்‌, சாணக்கியனின்‌ அமைச்சுப்‌ பணிகளைக்‌ காட்டிலும்‌, மிகப்பெரும்‌ வகையில்‌ மாறுபட்டதான அமைச்சுப்‌ பணிகளைப்‌ புரிந்தவருமாகிய மத்வாச்சாரியர்‌, அந்நிலையிலும்‌ நான்கு புருஷார்த்தங்கள்‌ பற்றிமட்டுமல்லாமல்‌, வேறு பிற பொருள்கள்‌ குறித்தும்‌, விரிவான ஆராய்ச்சி விளக்கங்களை எழுத, காலத்தைக்‌ கண்டு கொள்ளவில்லையா? இந்தியாவில்‌ குறிப்பாகப்‌ பண்டைக்‌ காலத்தில்‌ நூல்கள்‌, இன்றுபோல்‌ வெளியிடப்படுவது எப்போதும்‌ இல்லை? பல தலைமுறைகள்‌, நூலாசிரியரின்‌ மாணவர்‌களின்‌ உடைமையாக, வழிவழியாக இருந்துவந்தன; மூலநூல்களின்‌ பழைய கையெழுத்துப்‌ படிகளில்‌ அவ்வக்கால நிகழ்ச்செளிலிருந்து, விளக்கக் குறிப்புக்களை இடையிடையே நுழைக்கப்பட்டதற்குப்‌ பிந்திய தலைழுறைகளைச்‌ சார்ந்த ஆசிரியர்கள்பால்‌ குற்றமாகக்‌ கொள்ளவில்லை; ஆகவே, காம சாஸ்திரத்திற்கு ஒரு பிற்பட்ட காலத்தை வகுக்கும்‌ வகையில்‌, அதில்‌ காணப்படும்‌ “காதகர்ணி” போலும்‌, அங்கொன்றும்‌ இங்கொன்றுமான குறிப்புகள்‌, இந்‌நூல்களின்‌, சாணக்கியனுடைய ஆசிரிய உரிமையை மறுப்பதற்குப்‌ போதிய சான்றுகள்‌ ஆகா. ஆகவே, பிற்காலத்தே நுழைந்து- விடப்பட்ட, அங்கொன்றும்‌: இங்கொன்றுமான சில இடைச்‌ செருகல்களின்‌ வலுவைக்‌ கொண்டு; பண்டைய சமஸ்கிருத