பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சீபுர மாவட்டம்

501

நூல்களின் காலப் பழமையைக் கணிப்பது கூடாது. சாணக்கியன், அர்த்த நியாய, காம சாத்திரங்களை எழுதினார். இராமானுஜரால், அவருடைய ஸ்ரீபாஷ்யத்தில், குறிப்பிடப்படும் “த்ரமிலாசாரியரும்” கூட இவர்தாம் என்ற கூற்றுக்களின் வன்மை மென்மை எவ்வாறாயினும், அவருடைய காலத்தில், முதுபெரும் அறிஞர்களில் அவரும் ஒருவர் கிறித்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே, இந்தியா முழுமைக்கும் நாகரீகத்தின் ஒளிகாட்டிகளும், இந்தியச் சிந்தனையாளர்களின் தலைவர்களுமாகிய, “நாகார்ஜுனன்” “தின்னாகர்” , “புத்ததத்தர்”, “தர்மபாலர்”, “ஸங்கரர்,” “ராமானுஜர்”, “ஆனந்த தீர்த்தர்,” “மாதவர்”, “ஸாயனர்” மற்றும் தென்னிந்திய அறிஞர் பெருமக்களில் தலையாய நிலை பெற்றவர் என்பதும், ம்றுக்கப்படக் கூடியதன்று. மற்று எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த உண்மை, இந்நாடு, பொது நிகழ்ச்சிகளின் நிர்வாகம் குறித்து, எப்பொழுதும் ஐம்பத்தாறு நாடுகளாகப் பிரிவுண்டிருந்தாலும், இந்தியாவின் ஒருமைப்பாடு, அதன் நாகரீகத்தின் இடைவிடாத் தொடர்பு ஆகியவைகளை உறுதி செய்கிறது.

காஞ்சீபுரத்தின் பல பெயர்களுள் ஒன்று, “சத்ய வரத க்ஷேத்ரம்” என்பது. பாகவத புராணம், சத்யவரதன் (திராவிட அதாவது காஞ்சியின் காவலன்) விவஸ்வானின் மகன், மனு ஆயினன் எனக் கூறுகிறது. (பாகவதம்:9:2,3 பர்கிதர் பதிப்பு) இந்நில வரலாற்றுத் தொடரில், ஆரியராக்கப்பட்ட அரசர்களின் குல மரபைப், புராணக் கடவுள்கள் அல்லது வீரர்களின் குலமரபில் காணும், குடிவழிப்பட்டியலை விடாது உருவாக்கி வரும் பிராமணாக்களால் சூரிய குலத்தில் இணைக்கப்பட்டான் சத்யவரதன் என்பதே இதன் பொருள் ஆகும். பல்லவர் காலத்துக்கு முன்பு, காஞ்சியை ஆண்ட அரசர்கள், பெரும்பாலும், சத்யவரதன் வழிவந்தவராய சத்ய புத்திரர் எனப் பேசப்பட்டனர் என்பதைப், போகிறபோக்கில் குறிப்பிடல் கூடும். அசோகனின், “சத்தியபுத்தெர” என்பார், பெரும்பாலும், அவன் காலத்தில் காஞ்சி அரசர்கள்