பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சீபுர மாவட்டம்

503

பரவலாக இடம் பெற்றிருந்தன. மிகப் பெரிய ஆன்மீக வழிபாட்டு மையங்கள் ஏழு (திருக்கோயில் நகரங்கள் ஏழு : சிவ பக்தி, அல்லது விஷ்ணு பக்திச் சுடர்களைக் கூறும், ஆன்மிகப் பேராற்றல் மைய இடங்களாக மதிக்கத் தக்க இடங்கள் ஏழு என அழைத்தால், பொருள் தெளிவுக்கு உதவுவதாய் இருக்கும்) - பண்டைக் காலத்தில் முக்கிய இடங்களாக இருந்தன ; அவற்றுள் காஞ்சியும் ஒன்று.

“அயொத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, பூரீ, த்வாரவதீ சைவ சப்தைனா மொக்க்ஷதாயிகா”

சப்தகல்பத்ருபா என்பதில் எடுத்துக்காட்டப்பட்ட பூத சுத்தி தந்திரம். இத்தந்திரம், அண்மையில் எழுதப்பட்ட நூலாதல் கூடும். ஆனால், அச்சுலோகம், கால வெள்ளத்தில், தொல்லூழிக் காலமாக மிதந்து வந்த ஒன்று போலவே தோன்றுகிறது.] வட இந்திய நாகரீகத்தோடான, காஞ்சீபுரத்தின் தொடர்புண்மையை இது உறுதி செய்கிறது. இக்கால அளவில் உண்மையான வைதீக நெறி அறவே இறந்து விட்டது; ஆகவே, காஞ்சீபுரமோ அல்லது ஏனைய ஆறு நகரங்களோ, வைதீக யஜ்ஞந்தோடு சிறப்பாகத் தொடர் புற்றிருக்கவில்லை ; ஆனால், சிவ, விஷ்ணு, காளிகளை வழிபடும் மையங்களாக இருந்தன. காஞ்சி, தொடக்கத்திலிருந்தே ஆரிய நாகரீகத்தின் மையமாம் என்பதற்கு இது மேலும் ஒரு சான்றாம்.

ஆந்திர அரசு அழிவுநிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது, எண்ணற்ற பெளத்தப் பள்ளிகள் கட்டப்பட்டன. சாக பல்லவரின் நெருக்குதலால், ஆந்திர அரசு கீழ்க்கரைக்குத் தள்ளப்பட்டு, “தனகடகம்”, ஆந்திர அரசின் தலைநகராக ஆனபோது, ஆங்கு அழகிய, மிகச்சிறந்த, யவனக் கலையின் அடிச்சுவடுண்மையை உணர்த்தவல்ல, அமராவதி தவப்பள்ளி கட்டப்பட்டது. சைவ, வைஷ்ணவ சமயங்கள் அல்லாமல், பெளத்த சமயமும், அதனோடு சமண சமயமும் காஞ்சியில் நன்கு நிலைகொண்டுவிட்டன என்பதை முழுமையாக நம்பலாம். யவனக் கலையை மங்கலாக