பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

504

தமிழர் வரலாறு

நினைவுக்குக் கொணரவல்லதான புத்த படிமங்களும், சமண நாகரீகத்தின் பழங்கால, கல்லாலான நினைவுச் சின்னங்களும், அந்நகரில், காணப்படுவதன் உண்மையை, இது விளக்குவதாகும்:

பல்லவர்கள் :

சாக பல்லவர்கள். கி. பி. முதலாம், இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டு காலங்களில், ஆந்திரப் பேரரசுக்குள் படிப்படியாக முன்னேறிவிட்டனர். செளராஷ்டிரம், மாளவம், தனகடகம், மற்றும் காஞ்சீபுர மாவட்டங்கள், ஒன்றன்பின் ஒன்றாகச், சாக பல்லவ அரச இனத்துப் பிரிவினரின் ஆட்சிக் கீழ் வீழ்ந்துவிட்டன. “தர்யவுஷ் விஷ்தஸ்பன்” (தாரியஸ் ஹிஸ்தஸ்பெஸ்-(Darius HystaSpes) காலம் முதலாக, கடல் வழியாகவும், நிலவழியாகவும், இந்தியாவுக்குள் பெருவாரியாகப் பாய்ந்து வந்து, நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியுரிமையை நிலை நாட்டிக் கொண்ட இச்சாக பல்லவர், தொடக்க நிலையில், வெற்றிதேடி அலைந்தவராவர். இப்பழங்குடியினர், சைவ, வைஷ்ணவ, பெளத்த, சமண சமயங்களை ஏற்றுக்கொண்டவராதலைக் காண்கிறோமாகவே, சமயம், இவர்கள் மீது மென்மையாகவே ஆட்சி செய்துளதாகத் தெரிகிறது. இந்தியாவின் சமய சமுதாய அமைப்புகள், இன்று வெறிபிடித்து அலையும் நிலையில், பத்தில் ஒரு பங்கு அளவைக்கூட அப்போது பெற்றிருக்க வில்லையாகவே, இந்தியச் சமுதாய ஆட்சி அமைப்பில் ஓரிடத்தை அவர்கள் பிடித்துக்கொண்டனர். அவர்கள், பிராகிருத மொழியில் ஏதேனும் ஒரு கிளை மொழியைத், தங்களுடைய அரசவை மொழியாகவும், சமஸ்கிருதத்தைத், தங்களுடைய கலை, கலாச்சார மொழியாகவும் ஏற்றுக் கொண்டனர். அவர்கள். அயல் நாட்டுத் தொடர்புடைய தங்கள் இயற்பெயர்களைப் படிப்படியாகக் கைவிட்டு, அவற்றிற்குப் பதிலாக, சமஸ்கிருதம் அல்லது பிராகிருத மொழிப் பெயர்களை மேற்கொண்டுவிட்டனர். ஆந்திர அரசுக்கு அடி கொடுத்த தனகடகத்தின் ஆட்சியாளராகிவிட்ட