பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சீபுர மாவட்டம்

509

வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும்போது, துவக்கப்பட்ட புதியவொன்றன்று மாறாக, காஞ்சி, ஆரியக்கல்வியின் ஒரு மைய இடமாக, ஆகிக் கற்றுவல்ல பெரியவர்களை, வட இந்தியாவுக்கு, ஆங்கு சமஸ்கிருதப் புலமை வளர்ச்சியில் பங்கு கொள்ளுமாறு அனுப்பிய அந்நாள் தொட்டே இருந்துவரும் நிறுவனமாம் என்றே நான் கருதுகின்றேன். (இதுவரை கிடைத்துள்ள செய்திகளின்படி காஞ்சிப் பழைய பல்லவ அரச இணைத்து வரலாறு குறித்த முழு விளக்கங்களையும், பல்லவர் என்ற என் தமிழ் நூலில் (பகுதி : 1) கொடுத்துள்ளேன், பிற்பட்ட காலத்துப் பல்லவர்கள், தமிழர்களாக ஆகிவிட்டதுபோல, முற்ப்பட்ட காலத்துப் பல்லவர், தமிழரல்லர் ஆகவே, அதுபோலும் விளக்கம் இங்கு தேவையில்லை.

காஞ்சி நகரமோ, அந்நகரைச் சேர்ந்த பழைய பல்லவ ஆட்சியாளரோ, இப்போது கிடைக்கும் பழைய தமிழ்ப் பாக்களில் குறிப்பிடப்படவே இல்லை. இதற்குக் காரணம், அந்நகரம், தமிழ் நாட்டின் எல்லைக்குள் இருந்தாலும், பண்டைக் காலத்தில் அது, சமஸ்கிருத நாகரீகத்தின் தாயகமாகவே இருந்தது : தமிழ் நாகரீகத்தின் தாயகமாக இருக்கவில்லை : தமிழ் அரசர்களால் ஆளப்படவில்லை : ஆரிய அல்லது ஆரியராக ஆக்கப்பட்ட ராஜாக்களால் ஆளப்பட்டது. கி. பி. நான்காம் நூற்றாண்டளவில், (அடுத்த அதிகாரத்தில் காண இருப்பது போல்) அது, தற்காலிகமாகத் தமிழர் கைக்குச் சென்றது. இது, தமிழர் தனி நாகரீகம்: ஆரிய நாகரீகத்திற்குக், கீழ்ப்படிந்து போனது, காஞ்சீபுர மாவட்டத்தில் தமிழிலக்கிய நாகரீகம் பரவியது ஆகிய இரு விளைவுகளை உடையாதாகிவிட்டது.