பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சீபுர மாவட்டம்

517


175) விளங்கில் எனும் ஊரைச் சார்ந்த கடலனையும் ..(அகம் : 81) சேரர் படைத் தலைவன் பிட்டனையும் (அகம் :143) பாராட்டியுள்ளார்.

நக்கீரர், அவனைப் பாடிய நெடுநல்வாடையாம் நெடிய பாட்டில், தலையாலங்கானப் போர் பற்றிக் குறிப்பிடவில்லை. எனினும், அகநானூற்றுப் பாடல் ஒன்றில் (36) செழியன் வெற்றி கொண்ட, சேரன், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என எழுவர் பெயரையும் கூறியே பாராட்டியுள்ளார்.

தலையாலங்கானத்துப் போரில் வெற்றிகொள்ளப் பட்டோருள் சேரனும் ஒருவன். அங்ஙனமாகவும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், அச்சேரன் மீது மீண்டும் போர் தொடுத்துச் சென்று, அச்சேரர்க்கு உரிய முசிறியை முற்றி அழித்துள்ளான்; தலையாலங்கானப் போர் வெற்றியைப் பாராட்டிய நக்கீரரே, முசிறி முற்றுகையையும் பாடியுள்ளார் (அகம்: 57).

தலையாலங்கானப் போர் பாடிய அவரே. அப்பாண்டியன் படைத்தலைவனாம் பழையன் மாறன், கூடல்புறந்தலையில், பிறிதோரு போர் மேற்கொண்டு, அதில், வெள்ளம் போல் பரந்த படையொடு வந்தெதிர்த்த கிள்ளிவளவனை வென்று, அவன் படைகளோடு, அவன் நாட்டையும் கைப்பற்றிக் கொள்ள அக்களத்தில், தன் குலப்பகைவனாம் கிள்ளிவளவன் கண்ட தோல்விகேட்டு, கோதை மார்பன் என்ற சேரன் உவகை கொண்டதையும் பாராட்டியுள்ளார். (அகம் : 346).

செழியன் முன்னின்று நடத்திய தலையாலங்கானப் போரையும், அவன் படைத் தலைவன் பழையன் முன்னின்று: நடத்திய கூடல் போரையும் பாடிய நக்கீரரே, தலையாலங் கானப்போரில் செழியன்பால் தோல்விகண்ட திதியனையும், (அகம் :126) எருமையூரனையும் (அகம் : 258) பாடியுள்ளார்:

தலையாலங்கானப் போரில், சேரரைப் போலவே, சோழரும் தோல்வியுற்றதைப் பாடிய அவரே, அச்சோழர்