பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

524

தமிழர் வரலாறு

ஆக, இதுகாறும் எடுத்து வைத்த விரிவான அகச்சான்றுகளால், கச்சியைத் தலைநகராகக் கொண்ட வேங்கட நாடு வரையான தமிழ் வழங்கிய நாடு, பழந்தமிழர் காலத்தில் தமிழரசர்களாலேயே ஆளப்பட்டு வந்தது என்பது உறுதி செய்யப்பட்டது. ஆகவே, காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட நாடு, தமிழரசர்களால் ஆளப்படவில்லை, மாறாகச், சமஸ்கிருத ராஜாக்களால் ஆளப்பட்டது என்ற, திருவாளர். பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் கூற்று, உண்மைக்கு மாறானது என்பது தெளிவாக்கப்பட்டது.

காஞ்சியும், அதைத் தலைநகராகக் கொண்ட நாடும் பழந்தமிழர் காலத்தில், தமிழரசர்களால் ஆளப்படவில்லை. சமஸ்திருத ராஜாக்களால் ஆளப்பட்டது என்பதற்குத் திருவாளர் அய்யங்கார் காட்டும் பிறிதொரு காரணம், "காஞ்சீபுரம்" என்ற ஊர்ப்பெயரைக், கி. மு. 200 ஆம் ஆண்டைச் சேர்த்த பதஞ்சலி என்ற வடமொழி இலக்கண ஆசிரியர் உணர்ந்திருக்கவும், "காஞ்சி" என்ற அவ்வூர்ப் பெயர் பழந்தமிழ்ப் பாக்களில் இடம் பெறவில்லை என்பது:

கி. மு. 200ல் வாழ்ந்த பதஞ்சலி, மதுரையின் குடிமகன் எனும் பொருள் உடையதான "மதுராபுரக", உறையூரின் குடிமகன் எனும் பொருளுடையதான "உறகபுரக" என்ற சொற்களின் பிறப்பியல் முறைக்கு இலக்கணம் கூறாமல், காஞ்சீபுரத்தின் குடிமகன் எனும் பொருளுடையதான "காஞ்சீபுரக" என்ற சொல்லுக்கு மட்டுமே பிறப்பியல் இலக்கணம் வகுத்துள்ளார். காரணம், அந்நாட்களில், காஞ்சீபுரமே, சமஸ்கிருத நாகரீகத்தின் தென்கோடி எல்லைத் தளமாக அமைந்துவிட்டதுதான். அம்மாநகர், தமிழ் வழங்கும் நாட்டில் இடம் பெற்றிருப்பினும், அதற்கு என ஒரு தமிழ்ப் பெயர் இல்லை. "கச்சி" என்பது அதன் பெயராகக், கி. பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரும்பாணாற்றுப்படையில் (420) முதன்முதலாக இடம் பெற்றுள்ளது. ஆனால், அதுவும், இடையில் அணியும், அரைஞாண் அல்லது ஒட்டியானம் எனும் பொருள் உடை