பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சீபுர மாவட்டம்

525

யதான "காஞ்சீபுர" என்றதன் சுருங்கிய வடிவமாம் "காஞ்சி" என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். '"காஞ்சியூர்" என்ற சொல், தமிழ்ப் பாக்களில், இடம் பெற்றுள்ளது என்றாலும், அது, காஞ்சி மரங்கள் நிறைந்த ஊர் என்ற பொதுப் பொருள் உடையதே. அன்றி, காஞ்சிபுரத்தின் இயற்பெயரைக் குறிக்க வல்லதன்று" (பக்கம் : 322-23) என அவர் கூறியிருப்பது காண்க.

கி. மு. ஏழாம் நூற்றாண்டினராய பாணினி, நர்மதை ஆற்றிற்குத் தென்பால் உள்ள எந்த நாட்டையும் குறிப்பிடாமைக்குத் திருவாளர் பந்தர்கார் அவர்கள். "பாணினி, பாண்டிய, சோழ, கேரள நாடுகளை அறிந்திருப் பாராயின், அவற்றின் சொல்லமைப்பு இலக்கணத்தைக் கூற மறந்த, பொறுப்பற்ற இலக்கண ஆசிரியராக இருந்திருக்க மாட்டார், அவற்றை அவர் அறிந்திருந்தால், அவற்றிற்கான இலக்கண அமைதி கூறியிருப்பர்; அவற்றை அவர் அறிந்தவர் அல்லர். அவர் மட்டுமன்று ; அக்காலத்து ஆரியர் எவருமே அறிந்திருக்கமாட்டார்" எனக் கூறியதை ஏற்றுக்கொள்ளாத திருவாளர் பி. டி. எஸ். அவர்கள், "பாணினி, அப்பெயர்களை நன்கு அறிந்தவர்தாம் ஆனால், அப்பெயர்கள், சமஸ்கிருதச் சொற்களாக இல்லாமல், தமிழ்ச் சொற்களாகவே, அவை பற்றிய இலக்கணத்தை வகுக்கவில்லை; எனக் கூறவேண்டுமே. ஒழிய, அவர் அவற்றிற்கான இலக்கணம் வகுக்கவில்லை; ஆகவே அவர், அந்நாடுகளை அறிந்திருக்கவில்லை என்பது: பொருந்தாது. திரு. பந்தர்காரின் இவ்வாதம், இருக்கு வேதத்தில் ஆலமரம் குறிப்பிடப்படவில்லை என்பது கொண்டு இருக்கு வேத காலத்தில் ஆலமரமே இருக்கவில்லை என்பது போலும் பொருளற்ற வாதமாம்" (பக்கம் : 123, 124) என மறுத்துள்ளார்.

அங்கு அவ்வாறு வாதிட்ட திருவாளர் அய்யங்கார், கி. மு. 200இல் வாழ்ந்த பதஞ்சலி, "மதுராபுரக", "உறகபுரக" என்ற சொற்களுக்கான இலக்கண அமைதி: கூறாது, "காஞ்சீபுரக" என்பதற்குமட்டும் இலக்கண அமைதி