பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சீபுர மாவட்டம்

527


காவிரி வைகைக் கரைத் தமிழர்களாம் அம்மண்ணுக்குரிய மக்களை, இந்தியாவுக்கு வடக்கே இருந்து வந்த வெளி நாட்டினராக மதிக்கும் சில மதியிலா வரலாற்றாசிரியர்களின் கூற்றைத், திருவாளர் பி. டி. எஸ். அவர்கள், சில வரலாற்று ஆசிரியர்கள் திராவிடர்களின் மூதாதையர்களை, இந்தியாவின் வடமேற்கு அல்லது வ ட கி ழ க் கு க் கணவாய்கள் வழியாக, நம்பிக்கை மிக்க நல்ல வழிகாட்டிகளின் துணையோடு, கொண்டுவந்து எடுத்த எடுப்பிலேயே முழுமை பெற்ற வெளிநாட்டு நாகரீகத்தோடு, காவிரி வைகைக் கரைகளில் குடியமர்த்துகின்றனர்" (பக்கம் : 2) எனக் கூறி எள்ளி நகையாடுவதும், அதேபோல், வட ஆரியர் வருகைக்கு முன்பே முதிர்ந்த நாகரீகம் பெற்று மூத்த குடியினராய தமிழர்களை, நாகரீகம் அற்ற காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்திருந்து, ஆரியர் வருகைக்குப் பின்னரே நாகரீக உலகத்தில் அடியிட்டவராகக் கருதும் வேத மந்திரங்கள். இராமாயண பாரதக் கதைகள், பழம்புராணங்களின் கூற்றை மறுத்து, "வட ஆரியர்களால் தஸ்யூக்கள் என அழைக்கப்படும் தென்னாட்டுத் திராவிடப் பழங்குடியினர், நாடு கடத்தப்பட்டும், வாழ்விடம் தேடியும் அவ்வப்போது வந்து குடியேறிய, ஆரிய வந்தேறிகளால், நாகரீகம் பெறக் காத்திருந்த, நாகரீகம் கல்லாக் காட்டு மிராண்டிப் பழங்குடியினர் அல்லர்" (பக்கம் : 32) என, அவர் கூறியிருப்பதும் காண்க.

கி. மு. நான்காம் நூற்றாண்டில் வடஇந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையிலான வாணிகம் எப்போதும் இருந்திராத அளவு மிகப்பெரிய அளவினை அடைந்திருந்தது. என்று கூறிவிட்டு, "தஷண பாரதத்தில் பெரிய கனிவளச் சுரங்கங்களையும், வழிநெடுகிலும் மக்கள் பெருக்கத்தையும் கடந்து செல்லும் பெரு வழிகள், பாடலியை அடையும் ஏனைய பெருவழிகளிலும் நனி மிகச் சிறந்ததாம்" எனக் கெளடல்யர் கூறியதை மேற்கோள் காட்டிப், புகைவண்டித் தொடர்களும், உந்துவண்டிகளும் அழிந்துவிடாமல் விட்டு வைத்திருக்கும் இடங்களில், இக்காலத்தும் நாம் காண்பது போல், கிரீச் எனும் ஒலி ஓயாது தொடர்ந்து எழக் குமரிமுதல்