பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சீபுர மாவட்டம்

529


ஆக்கிய வரகரிகிச் சோற்றை வருவார்க்குப் படைக்கும், வரகுவைக்கோல் போர்த்து வரிசை வரிசையாக் உள்ள குடில்களைக் கொண்ட சிற்றூர்களையும் (191-196) விருந்தினர்க்குக் கோழிப் பொரியலோடு வெண்சோறு படைக்கும் வளமிக்க பேரூர்களையும் (254 - க3) கொழியல் அரிசிக் கூழைச், சுட்ட மீனோடு கொடுக்கும் வலைஞர் குடியிருப்புக்களையும் (274 - 282) நெய்யில் பொரித்த மாதுளங்காயோடு, மாவடு கலந்த இனிய உணவினை அளிக்கும் மறைகாப்பாளர் உறை பதிகளையும், (301-310) பிணவொடு சேரவிடாமலும், அரிசிமா தவிர்த்து வேறு எதையும் உண்ணவிடாமலும் ஒம்பி வளர்த்ததனால் கொழுத்த பன்றிக் கறியொடு களிப்புதரும் கள்ளும் வழங்கும், செல்வம் கொழிக்கும், வான்தோய் மாடங்கள் மலிந்த பட்டினங்களையும் (336-345) வாழை, பலா முதலான பழவகைகளையும், பன நுங்கையும் தெவிட்டுமளவு வழங்கி, நீர் வேட்கை தணிக்க, தெங்கின் நீரையும் வழங்கும் உழவர் குடியிருப்புக்களையும் (355-362) வரிசையாகக் கூறி, நாடு.பல கடக்கவேண்டிய பெருவழி நலம் விரிவாக எடுத்துக் கூறப்பட்டிருப்பது, அதை உறுதி செய்வது காண்க.

ஆகப், பழந்தமிழ்க் காலத்தே பெருவழிகள், தமிழகம் எங்கும் அமைந்திருந்தன என்பதும் அப்பெருவழிகள், இருமருங்கும் அழகிய சிற்றுார்களையும், பேரூர்களையும் கொண்டிருந்தன என்பதும் தெளிவாயின இப்பெருவழி நலத்தை அணிலாடு முன்றிலாரும், குடவாயில் கீரநக்கனாரும், கல்லாடனாரும் , 'அத்தம் நண்ணிய அங்குடிச் சிறூர்' என்ற அழகிய தொடரால் (குறுந் : 41, 79, அகம் : 9) பாராட்டியிருப்பது அறிக. இவ்வாறு செல்லும் வழி நெடுகிலும், சிறு சிறு குடியிருப்புக்களே எனினும், நனிமிகப் பலவாய் இருத்தவின், வழிச்செல்வார் அச்சம் கொள்ளாது, நிழல் கண்டவழி நெடும்பொழுது இருந்து இளைப்பாறியும் மணல் பரந்த இடங்காணும் தோறும் வண்டல் முதலாம் ஆடல் புரிந்து அகமகிழ்ந்தும் செல்லுமாறு அறிவுறுத்தவும்பட்டனர்;

த. வ.-34